சென்னை: "செம்ம டயர்டு பாஸ்" போதையில் திருடவந்து குறட்டை விட்டு தூக்கம்; 24 வயது இளைஞர் கைது..!



in Chennai Aminjikarai Youth Arrested by Theft Case 

 

அழகு நிலையத்தில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் குறட்டை விட்டு உறங்கியதால் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் உள்ள அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் பெண்களுக்கு என பிரத்தியேக பியூட்டி பார்லர் செயல்பட்டு வருகிறது. அழகு நிலையத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள், நேற்று முன்தினம் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றனர். பின் மீண்டும் மறுநாள் காலை வேலைக்கு வந்தனர்.

இதையும் படிங்க: முதல்வர் போஸ்டர் மீது செருப்பு வீச்சு.. வீடியோ எடுத்த நபர் கைது?

அப்போது, அழகு நிலையத்தின் கதவு திறக்கப்பட்டு, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டுள்ளனர். கடைக்குள் சென்று பார்த்தபோது, பொருட்கள் சிதறி இருந்துள்ளது. இதனால் நிறுவனத்தின் மேலாளர் அமைந்தகரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். 

chennai

போதையில் உறக்கம்

நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், மாடியில் குறட்டை சத்தம் கேட்டது. அங்கு சென்று பார்த்தபோது, போதையில் மர்ம ஆசாமி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது தெரியவந்தது. அவரை தட்டி எழுப்பியபோது, திருட வந்த இடத்தில் போதையில் உறங்கியது தெரியவந்தது. 

விசாரணையில், ஆந்திராவைச் சேர்ந்த கிஷோர் (வயது 24) என்பது தெரியவந்தது. இவர் பியூட்டி பார்லரில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நிலையில், அங்கு எதுவும் கிடைக்காததாலும், போதை அசதியினாலும் உறங்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து, காலை அதிகாரிகள் அவரை எழுப்பி கைது செய்த சம்பவம் நடந்துள்ளது. 

வேறெங்கேனும் முன்னதாக அவர் திருட்டு செயலில் ஈடுபட்டு இருக்கிறாரா? என விசாரணை நடந்து வருகிறது. 

இதையும் படிங்க: மக்களே கவனம்.. காய்ச்சலுக்கு மெடிக்களில் ஊசி செலுத்திய 18 வயது மாணவர் பலி; சென்னையில் சோகம்.!