கோவையில் ஷாக்.. 3000 பேரின் வேலை ஒரே நொடியில் காலி.. அமெரிக்க நிறுவனம் அதிர்ச்சி செயல்.!



  in Coimbatore Focus Edumatics Company Closed within Day 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுங்கம் பகுதியில் Focus Edumatics என்ற தனியார் ஐடி நிறுவனம் செயல்பட்டு வந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த நபரின் முதலீட்டில் நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளது.

இந்நிறுவனம் அமெரிக்க மாணவர்களுக்கு கல்வி பயிற்சி வழங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அமெரிக்காவில் இருக்கும் நிலையில், அவர் 3 மாதம் ஒருமுறை கோவை வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்க அறிவுறுத்தப்பட்ட்ட நிலையில், ஒரேநாளில் நிறுவனம் மூடப்படுவதாக மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மறைந்தாலும், ஐவரின் உடலில் வாழும் கோவை தலைமை ஆசிரியர்.. நெகிழ்ச்சி செயல்.!

வீடியோ நன்றிமாலை மலர்

3500 பேரின் நிலைமை என்ன?

இதனால் கோவையில் 2000 பேர், இந்தியாவின் பிற பகுதிகளில் 1500 பேர் என 3500 பேரின் வேலை பறிபோயுள்ளது. மேலும், அவர்களுக்கான இம்மாதம் ஊதியம் வருமா? பிஎப் தொகை என்னவாகும்? செட்டில்மண்ட் தொகை கிடைக்குமா? என கேள்வி எழுந்துள்ளது. 

எந்த விதமான முன்னறிவிப்பும் இன்றி நிறுவனம் திடீரென மூடப்பட்டதால், 3000 பேர் நிலைமை மிகப்பெரிய சோகத்தை சந்தித்துள்ளது. இதனால் தங்களுக்கு நியாயம் வேண்டும் என 3000 பேர் இன்று நிறுவனத்தின் முன்பு போராட்டம் நடத்தி, ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 

மேலும், நிறுவனத்தில் வேலை பார்த்த சான்றிதழ் கூட வழங்காமல் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் மீது குற்றசாட்டு உள்ளது போல மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ள காரணத்தால், நாங்கள் எங்கு சென்று வேலைக்கு சேர்வது? அங்கு கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்வது? என கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: ரூ.1000 கொடுக்குறேன் வா.. 20 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. தட்டிக்கேட்ட பெற்றோர் மீது தாக்குதல்.!