Toxic: யாஷ் பிறந்தநாள் கொண்டாட்டம்.. டாக்சிக் படத்தின் அசத்தல் கிலிம்ப்ஸ் வீடியோ.!
21 வயது மருத்துவக்கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்: பரோட்டா சாப்பிட்டு உறங்கியவர் மரணம்..!
மருத்துவக்கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், பரோட்டா சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.
ப்ரோட்டா சாப்பிட்டு உறங்கினார்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கீர்த்தனா (வயது 21). இவர் கடந்த நவ.30 அன்று, இரவு நேரத்தில் பரோட்டா சாப்பிட்டு உறங்கி இருக்கிறார். பின் மறுநாள் நீண்ட நேரம் ஆகியும் எழுந்துகொள்ள வில்லை.
இதையும் படிங்க: சிவகங்கை: பசு மீது விழுந்த மின்சார கம்பி; காப்பாற்ற முயன்ற பெண் பலி.!
பேச்சு-மூச்சின்றி மீட்பு
இதனால் வீட்டில் இருந்தவர்கள் அவரை எழுப்பியும் பலனில்லாததால், பேச்சு மூச்சின்றி கிடந்த பெண்ணை மீட்ட பெற்றோர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மாணவியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பரிதாப மரணம்
தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி, ஏற்கனவே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். இந்த தகவலை அறிந்த குடும்பத்தினர் கதறியழுதது சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த துடியலூர் காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியில் சோகம்; 2 தொழிலாளர்கள் பரிதாப பலி., வீடு இடிந்து-விழுந்ததால் சோகம்.!