நடிகர் விஷாலுக்கு என்னதான் ஆச்சு? வெளியானது மருத்துவ அறிக்கை.! விபரம் உள்ளே.!
பழைய வீட்டை புதுப்பிக்கும் பணியில் சோகம்; 2 தொழிலாளர்கள் பரிதாப பலி., வீடு இடிந்து-விழுந்ததால் சோகம்.!
வீடு புதுப்பிப்பு பணியின்போது, 2 கட்டிட தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டை பகுதியில் பழமையான வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை புதுப்பிக்கும் பணியில், கட்டிட தொழிலாளர்களான மணி (வயது 28), குமார் (வயது 23) ஆகியோர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
மரணம் உறுதி
அச்சமயம் திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் இருவரையும் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதையும் படிங்க: அரக்கோணம்: சுவரில் பாய்ந்த மின்சாரம்; சிறுவன் பரிதாப பலி.!
காவல்துறையினர் விசாரணை
அங்கு நடந்த பரிசோதனையில், இருவரும் வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் இந்த காவல்துறையினர், குமார், மணி ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருமணமாகாத ஏக்கம்... 36 வயது இளைஞர் தற்கொலை.! திருச்சியில் சோகம்.!