அந்தரத்தில் தொங்கிய பேனா.. கேமரா வைத்து கழிவறையில் நோட்டமிட்ட மருத்துவர்.. பொள்ளாச்சியில் பகீர்.!



  in Coimbatore Pollachi Hospital Spy Camera Training Doctor Arrested 

பயிற்சி மருத்துவர் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமிரா வைத்து சிக்கிக்கொண்டார்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை அலுவலகத்தில், செவிலியர் பயிற்சி மாணவிகள் மற்றும் அலுவலக பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறை ஒன்றும் உள்ளது. 

ரகசிய கேமரா

இதனிடையே பெண் செவிலியர் ஒருவர் கழிவறைக்கு சென்ற போது, அங்கு பேனா போன்ற ஒன்று அந்தரத்தில் தொங்கிகொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அதனை எடுத்து பார்த்த போது, அதில் கேமரா பொருத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையும் படிங்க: நிலத்தை அளவிட ரூ.5 ஆயிரம் இலஞ்சம்.. கணவரை இலஞ்சம் வாங்க அனுப்பிய பெண் சர்வேயர்..!

பயிற்சி மருத்துவர் கைது

பின் இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இதன் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையைத்தொடர்ந்து, பெண்கள் கழிவறையில் கேமரா வைத்த பயிற்சி மருத்துவர் வெங்கடேஷ் (வயது 30) என்ற நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் மருத்துவர்கள், செவிலியர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: விருந்தினர் மாளிகையில் விபச்சாரம்; வெளிநாட்டு பெண்களை அழைத்து வந்து ஜாலியா., ஜிம்கானா.!