இருசக்கர வாகனம் - அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து; பள்ளி மாணவர், மாணவி பரிதாப பலி.!

அரசுப்பேருந்து - இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மாணவர், மாணவி உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கேசவ நாராயணபுரம் பகுதியில் வசித்து வருபவர் மோகன்ராஜ் (வயது 31). இவர் நேற்று முந்தினம் காலை நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார்.
இதையும் படிங்க: கடலூர்: வெடிக்காத பட்டாசு மருந்தை கொளுத்தி விளையாட்டு; 4 ம் வகுப்பு சிறுவனின் முகம் கருகி சோகம்.!
அப்போது, அதே ஊரில் வசித்து வரும் பள்ளி மாணவர்கள் சுனில் ராஜ் (வயது 17), சாந்தினி, சந்தியா, பவித்ரா ஆகியோரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு குறிஞ்சிப்பாடி நோக்கி பயணம் செய்தார்.
இருவர் பரிதாப பலி
கஞ்சமநாதன்பேட்டை பகுதியில் இவர்கள் பாயனித்தபோது, எதிர்திசையில் வந்த அரசுப்பேருந்து - இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் சுனில்ராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பிற நால்வர் சிதம்பரம், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இனிடையே, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவித்ரா (15), சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. குறிஞ்சிப்பாடி காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனம் - அரசு பேருந்து மோதி விபத்து; ஒருவர் பலி., 3 மாணவிகள் காயம்.!