நடிகர் ரியாஸ் கானின் மருமகள் வளைகாப்பு; நேரில் வந்து வாழ்த்திய திரைபிரபலங்கள்.!
13, 14 வயது சிறுமியை விபசாரத்தில் தள்ளி சீரழித்த தம்பதி; கள்ளக்காதல் அம்பலமானதால், தன்னை காப்பாற்ற நடந்த கொடுமை.!

தனது கள்ளக்காதல் உறவை நேரில் பார்த்த சிறுமி, தன்னை கணவரிடம் மாட்டிவிடுவார் என எண்ணிய பெண் அரங்கேற்றிய கொடுமையால், 2 சிறுமிகள் வாழ்க்கையின் இளம் பருவத்தில் எதிர்கொண்ட துயரம் நெஞ்சை பதறவைக்கிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அரசுப்பள்ளியில், கடந்த 2014ம் ஆண்டு 2 சிறுமிகள் படித்து வந்தனர். ஏழாம் வகுப்பு பயின்ற 13 வயது சிறுமி, 8ம் வகுப்பு பயின்ற 14 வயது சிறுமி தோழியாக இருந்தனர். 13 வயது சிறுமிக்கு பெற்றோர் இல்லை என்பதால், பாட்டியின் பராமரிப்பில் இருந்தார். அங்குள்ள இட்லி கடைக்கு சென்று வரும்போது, கடையின் உரிமையாளர் செந்தில் குமாரின் மனைவி தனலட்சுமி, பெண்ணின் கள்ளக்காதலன் தீர்க்கண்டேஸ்வரம் ஆனந்தராஜ் ஆகியோர் தனிமையில் இருப்பதை கண்டுள்ளார்.
இதையும் படிங்க: 12ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்; டியூசன் சென்டரில் அதிர்ச்சி.. 3 குழந்தைகளின் தந்தை கைது.!
கள்ளக்காதல் அம்பலம்
சிறுமி எங்கு இவ்விஷயத்தை வெளியே சொல்லிவிடுவார் என்ற பயத்தில், சிறுமியை கட்டாயப்படுத்தி வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர், ஆனந்தராஜ் அத்துமீற அனுமதித்து இருக்கிறார். பின் சிறுமியை மிரட்டிய ஆனந்தராஜ், திட்டக்குடியில் வசித்து வரும் மோகன் ராஜ், மதிவாணன் ஆகியோர் பலாத்காரம் செய்ய அனுமதித்தார். பின் மாணவியை மிரட்டி, அவரின் தோழியையும் ஆனந்தராஜ் பலாத்காரம் செய்தார். பின் இரண்டு மாணவிகளையும் தனலட்சுமி விருத்தாசலத்தில் செயல்பட்டு வந்த விபசார புரோக்கர் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
பாலியல் வன்கொடுமை
அங்கு புரோக்கர் செல்வராஜ் மூலமாக, திட்டக்குடியில் வசித்து வந்த மதபோதகர் அருள்தாஸ் என்பவரின் வீட்டுக்கு சிறுமிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து கலா, தனலட்சுமி, புரோக்கர்கள் சேர்ந்து மாணவிகளை விழுப்புரம், வளவனுர், சேலம், வடலூர், நெய்வேலி பக்திக்கு அழைத்துச்சென்று விபச்சாரத்தில் வற்புறுத்தி ஈடுபட வைத்தனர். இறுதியாக அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் வசித்து வரும் சேகரின் மகன் சதீஷ்குமார் (39), மனைவி தமிழரசி ஆகியோரிடம் சிறுமிகள் விற்பனை செய்யப்பட்டனர்.
விபசார தொழிலில் தள்ளி கொடுமை
விற்பனை செய்ப்பட்ட சிறுமிகள் வடலூரில் வாடகை வீட்டில் வைத்து விபச்சாரத்தில் தள்ளப்பட, சிறுமிகள் இருவரும் தப்பி மீண்டும் திட்டக்குடிக்கே சென்று காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். இந்த விசயம் குறித்த புகாரின் பேரில் சதீஷ்குமார், தமிழரசி, அருள் தாஸ் உட்பட 19 பேரின் மீது வழக்குப்பதிவு செயப்பட்டது. 17 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சதிஷ் குமார் மற்றும் தமிழரசி தொடர்ந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். கடந்த 2016ல் வழக்கு சென்னை நீதிமன்றத்தின் தலையீட்டால் சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டது.
குற்றவாளிகள் கைது
சிபிசிஐடி காவல்துறையினர் குற்றப்பத்திரிகையும் கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் ஹாக்கள் செய்தனர். 16 பேரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர்களுக்கு தீர்ப்பும் வழங்கப்பட்டது. பெண் ஒருவர் மட்டும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். 2018ம் ஆண்டு முதல் தலைமறைவு ஜோடி தேடப்பட்டு வந்தனர். இதனிடையே, இருவரும் கோவையில் இருப்பதாக தகவல் கிடைத்து, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இருவரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.
இதையும் படிங்க: கடலூர்: திதி கொடுக்க ஆற்றுக்கு வந்த மக்களை திணறவைத்த திடீர் வெள்ளம்; காவல்துறை துரித செயல்.!