கடலூர்: திதி கொடுக்க ஆற்றுக்கு வந்த மக்களை திணறவைத்த திடீர் வெள்ளம்; காவல்துறை துரித செயல்.!



in Cuddalore Veppur Manimutharu River Sudden Flood On Masi Makam 

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர், நல்லூர் கிராமத்தில் மணிமுத்தாறு உள்ளது. மாசி மகத்தினை முன்னிட்டு, கிராம மக்கள் பலரும், ஆற்றில் முன்னோர்க்கு தர்ப்பணம் கொடுத்தனர். 

கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாகவே அதிக மழை பெய்து வந்தது. இதனால் மணிமுத்தாறில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படவே, திதி கொடுத்த மக்களை வெள்ள நீர் சூழ்ந்தது. 

இதையும் படிங்க: மருமகளிடம் பாலியல் அத்துமீறல்.. மாமியாருடன் சேர்ந்து தீயிட்டு கொளுத்திய கண்ணகி.!

ஒருசில நபர்கள் வெள்ளம் வருவதை கண்டு கரையேறி தப்பினர். சிலர் ஆற்றின் உட்பகுதியில் சிக்கிக்கொள்ளவே, வேப்பூர் காவல்துறையினர் விரைந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், மணிமுத்தாறு விருத்தாச்சலம் வரை செல்வதால், அங்குள்ள காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

விருத்தாச்சலம் காவல்துறையினர் சார்பில் ஒலிபெருக்கி வைத்து எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, ஆற்றில் மக்கள் இறங்காத வண்ணம் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
 

இதையும் படிங்க: கடும் வெயிலில் தவித்த முதியவர்.. உதவிக்கரம் நீட்டிய நல்லுள்ளம்.. குவியும் பாராட்டுக்கள்.!