கடலூர்: கத்தி முனையில் இளம்பெண் பலாத்காரம்; வீடியோ எடுத்து மிரட்டிய காம மிருகங்கள்.. அதிரவைக்கும் சம்பவம்.!



in Cuddalore Virudhachalam 2 arrested woman Raped 

 

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை இருவர் கும்பல் திட்டமிட்டு சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் அருகேயிக்கும் கிராமத்தில் வசித்து வரும் 29 வயது இளம்பெண்ணுக்கு, திருமணம் முடிந்து கணவர் இருக்கிறார். இவரின் கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். பெண்மணி வீட்டில் தனியே இருக்கும்போது, கம்மாபுரம், கோ. மாவிடந்தல் கிராமத்தில் வசித்து வரும் செல்வராஜ் என்பவரின் மகன் சிவகுமார், போதையில் வருகை தந்துள்ளார்.

இதையும் படிங்க: பாலத்தில் ஜெட் போல பயங்கர வேகம்.. நொடியில் நடந்த சம்பவத்தால் 5 பேர் படுகாயம்.. பதறவைக்கும் காட்சிகள் உள்ளே.!

அச்சமயம், தான் எடுத்து வந்த கத்தியை காண்பித்து மிரட்டிய கொடூரன், இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். அதனை வீடியோ பதிவும் செய்துகொண்டுள்ளார். பின் வீடீயோவை காண்பித்து தொடர்ந்து பெண்ணை மிரட்டி பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்து இருக்கிறார். இந்த வீடீயோவை நண்பரான வினோத் என்பவருக்கும் அனுப்பி இருக்கிறார். 

Cuddalore

மிரட்டல் & அத்துமீறல்

இதனை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட வினோத், வீடீயோவை வெளியிடுகிறேன் என பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனிடையே, சம்பவத்தன்று சிவகுமார் மற்றும் வினோத், பெண்ணின் ஆபாச வீடீயோவை வெளியிடுவதாக மிரட்டி ரூ.50 ஆயிரம் ரொக்கம், 3 சவரன் நகைகளை வாங்கி இருக்கின்றனர். 

கூடுதலாக பணம், நகை கேட்டும், நாங்கள் அழைக்கும்போதெல்லாம் தொல்லை கொடுக்க வேண்டும் எனவும் மிரட்டி இருக்கின்றனர். இவர்களின் தொல்லை தாங்க இயலாத பெண்மணி, கம்மாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிவகுமார் மற்றும் வினோத் ஆகியோரை கைது செய்தனர். 

இதையும் படிங்க: கர்ப்பமாக்கி கைவிட்ட காதலன்.. அன்னையை தேடி ஓடி விபரீத முடிவெடுத்த இளம்பெண்.. கண்ணீரில் உறவினர்கள்.!