தேர்வுக்கு பயந்து டெல்லியில் இருந்து தமிழ்நாடு வந்த 17 வயது சிறுவன்; 12 நாட்களுக்கு பின் மீட்பு.!



in Delhi Minor boy Arrived Tamilnadu After Fear With Exam 

 

டெல்லியில் உள்ள கன்னாட் பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வந்த சிறுவன், கடந்த பிப்.21 அன்று மாயமாகினார். இதுதொடர்பாக தந்தைக்கு அவர் அனுப்பிய தகவலில், பதினோராம் வகுப்பு தேர்வை எதிர்கொள்ள மனமில்லாததால், வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும், தன்னை யாரும் தேட வேண்டாம் எனவும் கூறி இருக்கிறார். 

சிறுவன் மீட்பு

இதனையடுத்து, சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் சிறுவனை பல இடங்களில் தேடி வந்தனர். சிறுவன் வீட்டில் இருந்து வெளியேறி 2000 கிமீ பயணம் செய்த நிலையில், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி பகுதியில் கண்டறியப்பட்டார். இதனையடுத்து, அவர் மீட்கப்பட்டு பெற்றோரும் ஒப்படைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: செல்போன் பயன்படுத்த அனுமதிக்காததால் ஆத்திரம்; தாய்-தந்தை, அக்கா கல்லால் அடித்துக்கொலை.. இளைஞன் வெறிச்செயல்.!

delhi

தொழிலாளியாக சிறுவன்

இத விஷயம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், சிறுவனை தேட தனிப்படை அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிறுவன் டெல்லியில் இருந்து பெங்களூர் வந்த நிலையில், பெங்களூரில் ஒருவர் உதவியுடன் கிருஷ்ணகிரி வந்துள்ளார். அங்கு கட்டுமான பணிகளில் கூலி தொழிலாளியாக அவர் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். 

இதையும் படிங்க: மழலை மொழியில் அங்கன்வாடியில் பிரியாணி கேட்டு கோரிக்கை; அமைச்சரின் அசத்தல் பதில்.!