ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
செல்போன் பயன்படுத்த அனுமதிக்காததால் ஆத்திரம்; தாய்-தந்தை, அக்கா கல்லால் அடித்துக்கொலை.. இளைஞன் வெறிச்செயல்.!

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜெகத்சிங்க்பூர் மாவட்டம், ஜெயபாடா ஷகி பகுதியில் வசித்து வருபவர் பிரசாந்த் காலியா (வயது 65), இவரின் மனை கனக்லதா (வயது 62). தம்பதிகளுக்கு 25 வயதுடைய ரோஸ்லின் என்ற மகள், சூர்யகாந்த் என்ற 21 வயது மகன் இருக்கின்றனர்.
சூர்யகாந்த் கல்லூரியில் படித்து வருகிறார். எப்போதும் அவர் செல்போனை கையில் வைத்து நோண்டிக்கொண்டு, ஆன்லைன் கேமுக்கு அடிமையாகியும் இருந்துள்ளார். படிப்பிலும் கவனம் செலுத்துவதில்லை.
இதையும் படிங்க: கோவை: கணவன் - மனைவி சண்டையில் விபரீதம்; மனைவியை சுட்டுக்கொன்று, கணவர் தற்கொலை.!
பெற்றோர் அடித்துக்கொலை
இதனை பெற்றோர் மற்றும் இளைஞரின் அக்கா என குடும்பத்தினர் கண்டித்து வந்துள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் உறக்கத்தில் இருந்து எழுந்த சூர்யகாந்த், விபரீத செயலை அரங்கேற்றியுள்ளார்.
அதாவது, தான் செல்போன் பயன்படுத்த தடையாக இருக்கும் அப்பா பிரசாத், அம்மா லதா, அக்கா ரோஸ்லின் ஆகியோரை கல்லால் தாக்கி கொடுரமாக கொலை செய்தார். பின் தலைமறைவானார்.
தகவல் அறிந்த காவல்துறையினர் 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு, சூர்யகாந்த்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தனியார் நிதிநிறுவன ஊழியர் எரித்துக்கொலை? பணம் வசூலிக்கச் சென்ற இடத்தில் சடலம் மீட்பு.. பதறவைக்கும் சம்பவம்.!