#Breaking: கார் விபத்தில் அதிமுக புள்ளி உட்பட 3 பேர் பலி.. கார் - லாரி நேருக்கு நேர் மோதி சோகம்.!



in Dharmapuri Car Accident AIADMK Former Counselor Dies 


தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில், இன்று நின்று கொண்டு இருந்த சரக்கு லாரியின் மீது, சொகுசு கார் ஒன்று நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் மற்றும் அவரின் 2 நண்பர்கள் பலியாகினர். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில் வசித்து வருபவர் முனிகிருஷ்ணன். இவர் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஆவார். இவரின் நண்பர்கள் ஸ்ரீனிவாஸ், பசவராஜ். இவர்கள் உட்பட 5 பேர் குழு, சம்பவத்தன்று தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சென்று இருந்தது. 

அங்கு தங்களின் பொழுதுகளை இன்பமாக செலவிட்ட அனைவரும், பின் மீண்டும் ஓசூர் நோக்கி பயணம் செய்தனர். இவர்களின் வாகனம் பாலக்கோடு பகுதியில் வந்தது. 

இதையும் படிங்க: அம்மாவை கவனிக்க வந்த கேர்-டேக்கருடன் தனிமை.. நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டிய இளம்பெண்.!

Dharmapuri

விபத்தில் சிக்கிய கார்

காரை முனிகிருஷ்ணனின் இயக்கிய நிலையில், கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அங்குள்ள நத்தம் பகுதியில், சாலை தடுப்பில் மோதி, எதிர்திசையில் சாலையோரம் நின்ற லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. 

இந்த விபத்தில் முனிகிருஷ்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த பசவராஜ், ஸ்ரீனிவாஸ் ஆகியோர், தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். 

விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தர்மபுரி தவெக நிர்வாகி போக்ஸோவில் கைது.!