மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பட்டா கத்தியுடன் வார்டு உறுப்பினருக்கு பாமக நிர்வாகி பகிரங்க கொலை மிரட்டல்; வீடியோ வைரலானதால் கைது.!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம், கூத்தப்பாடி கிராமத்தில் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பில், குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக்கிடற. இதனால் கூத்தபடியில் இருக்கும் சில தெருக்களில், முறையான குடிநீர் விநியோகம் செய்ய இயலவில்லை.
இந்த விஷயம் குறித்து ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் புகழேந்தியிடம், பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இதனிடையே, அங்கு மதுபோதையில் வருகை தந்த பாமக நிர்வாகியான எல்லப்பன் என்பவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் புகழேந்தியிடம் தகராறு செய்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் பயங்கரம்... இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.!! 5 நபர்களுக்கு வலைவீச்சு.!!
வீடியோ வெளியானதால் கைது
மேலும், கடுமையான வாக்குவாதத்தில் போதையில் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றவர், தனது வீட்டில் இருந்து 5 அடி நீளம் கொண்ட பட்டா கத்தியை எடுத்து வந்து சுழற்றி மிரட்டல் விடுத்தது இருக்கிறார். இந்த விஷயம் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஒகேனக்கல் காவல்துறையினர், பாமக நிர்வாகியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: சென்னையில் பயங்கரம்... துண்டு துண்டாக வெட்டி பாலியல் தொழிலாளி படுகொலை.!! அதிர்ச்சி வாக்குமூலம்.!!