53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
சென்னையில் பயங்கரம்... துண்டு துண்டாக வெட்டி பாலியல் தொழிலாளி படுகொலை.!! அதிர்ச்சி வாக்குமூலம்.!!
சென்னையில் இளம் பெண் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிவகங்கையைச் சேர்ந்த மணிகண்டன் என்ற நபரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூட்கேசில் அடைக்கப்பட்ட உடல்
சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேசில் அடைக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் இறந்த பெண் பாலியல் தொழில் செய்யும் தீபா என்று தெரிய வந்தது. இதனை தொடர்ந்து உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வந்தனர்.
கைது செய்யப்பட்ட குற்றவாளி
இந்த கொலை தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் சிவகங்கையைச் சேர்ந்த மணிகண்டன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். பாலியல் தொழிலில் புரோக்கராக வேலை செய்து வந்த இவர் தீபாவை கொலை செய்ததை காவல்துறை விசாரணையில் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அந்த நபர் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: போலீஸ்காரருடன் தலைமறைவாகிய மனைவி... ஆத்திரத்தில் மாமியார், பாட்டி படுகொலை.!! கணவன் வெறி செயல்.!!
கொலையாளி வாக்குமூலம்
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கொலையாளி மணிகண்டன் காவல்துறையிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அந்த வாக்குமூலத்தில் தீபாவை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து வீசியதையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த கொலை சம்பவம் சென்னையில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது .
இதையும் படிங்க: கொடுமை... 17 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய அக்கா கணவர்.!! போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறை.!!