7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம்; இயக்குனர் செல்வராகவன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
குடும்பத்தினர் கண்முன் மின்னல் தாக்கி சோகம்; துக்க வீட்டிற்கு வந்த 25 வயது இளைஞர் பெற்றோர் கண்முன் பலி.!
துக்க வீட்டிற்கு சென்ற இளைஞர், மின்னல் தாக்கி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள திண்டல், திருமலை கார்டன், வித்யா நகர் பகுதியில் வசித்து வருபவர் ராமதுரை. இவரின் மகன் கவின் குமார் (வயது 25). இவர் ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில், பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இதையும் படிங்க: அட பாவமே... மனைவி, குழந்தைகள் மீது கொலை முயற்சி.!! மது பிரியர் வெறி செயல்.!!
இதனிடையே, கடந்த டிச.25 அன்று, அம்மாபேட்டை, ஜர்த்தல் பகுதியில் வசித்து வந்த கவினின் தாத்தா உயிரிழந்தார். 3 நாட்கள் துக்க நிகழ்ச்சிக்காக கவின் குமார், அவரின் தந்தை, தாய், அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார்.
துக்க வீட்டில் சோகம்
பின் அங்குள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில், காரை நிறுத்திய அனைவரும் துக்க வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தனர். கவின் குமார் காரை நிறுத்திவிட்டு தனியாக நடந்து வந்தார்.
அச்சமயம், அங்கு இடி-மின்னலுடன் மழை பெய்த நிலையில், தனியாக வந்த கவின் மீது மின்னல் விழுந்தது. இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைக்கண்டு அதிர்ந்துபோன குடும்பத்தினர், அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும், அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டதால், குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இதையும் படிங்க: ரூ.110 நோட்டு கொடுத்து சில்லறை வாங்கிச் சென்ற மர்ம ஆசாமி; பெட்டிக்கடைக்காரர்களே உஷார்.!