வீர மங்கையின் பிறந்தநாள்.! மரியாதை செலுத்தி தவெக தலைவர் விஜய் எடுத்த உறுதி.!
கள்ளக்குறிச்சி: கைம்பெண் பலாத்காரம் & கொலை விவகாரம்; 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை.!
சொசைட்டிக்கு பால் ஊற்றிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்த பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில் 2 பேரிடம் ஒரு வாரம் கழித்து விசாரணை நடந்து வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம், திம்மாபுரம் பகுதியில் கணவரை இழந்த இளம்பெண் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இதையும் படிங்க: சாமி தீர்த்தம் குடித்து, ஹாஸ்பிடலில் அனுமதி.! சாமியார் போட்ட பலே திட்டம்.!
இவர், கணவரின் மறைவுக்குப்பின் பால் மாடு வைத்து, அதனை கறந்து சொசைட்டிக்கு ஊற்றி பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இதில் வரும் வருமானத்தை வைத்து அவரும், குழந்தைகளும் வாழ்க்கையை நகர்த்தி இருக்கின்றனர்.
பெண் பலாத்காரம் & கொலை
இதனிடையே, கடந்த டிச.26 அன்று பெண்மணி பால் ஊற்றிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துகொண்டு இருந்தார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வராத காரணத்தால், உறவினர்கள் அவரை தேடி சென்றனர்.
அப்போது, கரும்பு தோட்டப் பகுதியில் அரைநிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளதை உறுதி செய்தனர்.
2 பேரிடம் விசாரணை
இந்த விவகாரத்தில் கடந்த ஒரு வாரமாக எந்த விதமான முன்னேற்றமும் கிடைக்காத நிலையில், அப்பகுதியில் மதுபானம் அருந்திய கும்பல் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
தற்போது உள்ளூரில் டீ கடை வைத்து நடத்தி குமரேசன், பெல் மணி ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி இருக்கின்றனர். இவர்களிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: 14 வயது சிறுமிக்கு பிரசவம்; லிப்ட் கொடுப்பதாக இளைஞன் அதிர்ச்சி செயல்.!