திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
14 வயது சிறுமிக்கு பிரசவம்; லிப்ட் கொடுப்பதாக இளைஞன் அதிர்ச்சி செயல்.!
பள்ளிக்குச் செல்ல காத்திருந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் நடந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில், கடந்த ஓராண்டுக்கு முன்னதாக 9 வகுப்பு பயின்று வரும் சிறுமி ஒருவர் பள்ளிக்கு செல்வதற்காக காத்திருந்துள்ளார்.
அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகன ஓட்டுனர் ஆகாஷ் என்ற இளைஞர், சிறுமிக்கு லிப்ட் கொடுப்பதாக தனது வீட்டிற்கு மிரட்டி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: பள்ளி பருவ காதலை மீண்டும் கனெக்ட் செய்த பெண் ஐடி ஊழியர்.. கற்பழித்து கைவிட்ட காதலன்.!
சிறுமி பலாத்காரம்
மேலும், இது குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார். இந்த சம்பவத்தில் பயந்து போன சிறுமி, இது குறித்து வெளியே கூறாமல் இருந்து வந்துள்ளார்.
இதனால் அவர் கர்ப்பமான நிலையில், சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. தற்போது 10-ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில், காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.
போக்ஸோவில் கைது
விசாரணையில், உண்மை அம்பலமானத்தைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், போக்ஸோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சிறுமியை பலாத்காரம் செய்த ஆகாஷ் என்ற இளைஞனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஓரினசேர்க்கையில் 10 வயது சிறுவன் கொடூர கொலை; கோவில்பட்டி துயரத்தில் பரபரப்பு தகவல் அம்பலம்.!