என் புருஷன் டார்ச்சரா இருக்கான், போட்டுத்தள்ளிடு.. ஸ்கெட்ச் போட்ட மனைவி.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு.!



in Kanchipuram Murder Attempt For Affair 

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், பென்னலூர் வனப்பகுதியில், கடந்த பிப்.15 அன்று ஒருவர் இரத்த காயத்துடன் உயிருக்கு போராடினார். தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர், அந்த நபரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்து, தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

கொலை முயற்சி

இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர், ஸ்ரீபெரும்புதூர், மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் புனித்ராஜ் (வயது 40), அவரின் நண்பர்களான சென்னை துரைப்பாக்கம் ஆனந்தன் (வயது 35), கடலூர் புவனகிரியை சேர்ந்த ராகேஷ் (வயது 35) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை முயற்சி சம்பவம் அம்பலமானது. 

இதையும் படிங்க: காஞ்சிபுரம்: போதை ஆசாமிகளால் சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்; பதறவைக்கும் வீடியோ..!

kanchipuram

கடலூர் மாவட்டத்தில் வசித்து வரும் திலீப் குமார், அவரின் மனைவி ரேகா. தம்பதிகளுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்து, இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். திலீப் குடும்பத்துடன் ஸ்ரீபெரும்புத்தூர், பாப்பான்குழி பகுதியில் வசித்து வருகிறார்.  

கள்ளக்காதலால் விபரீதம்

கடந்த ஓராண்டுக்கும் மேலாக தம்பதியிடையே கருத்து வேறுபாடு நிலவியதால், இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ரேகாவுக்கு மேட்டுபாளையம் பகுதியில் வசித்து வந்த புனிதராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இந்த விஷயத்தை அறிந்த திலீப் மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் கணவரை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 

கடந்த பிப்.15 அன்று வேலையை முடித்துவிட்டு வந்துகொண்டு இருந்த திலீப் குமாரின் மீது புனித ராஜ் மற்றும் அவரின் நண்பர்கள் தாக்குதல் நடத்தி கொலை முயற்சி செய்துள்ளனர். நல்வாய்ப்பாக திலீப் தப்பிவிட்ட நிலையில், தற்போது புனித குமார், அவரின் நண்பர்கள் கைது செய்யப்பட்டனர். ரேகா தலைமறைவானதால், அவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். 
 

இதையும் படிங்க: #JustIN: காதலிக்க மறுத்த சிறுமியை வீடுபுகுந்து கற்பழித்த கொடூரம்.. காஞ்சிபுரத்தில் பயங்கரம்.!