#JustIN: காதலிக்க மறுத்த சிறுமியை வீடுபுகுந்து கற்பழித்த கொடூரம்.. காஞ்சிபுரத்தில் பயங்கரம்.!



in Kanchipuram minor Girl Abused 

 

14 வயது சிறுமியை காதல் தொல்லை கொடுத்த நபர் வீடுபுகுந்து பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

காஞ்சிபுரம் நகரில் வசித்து வரும் இளைஞர் விஷ்ணு. இதே பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். விஷ்ணு சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். 

இதையும் படிங்க: #Breaking: காஞ்சிபுரத்தில் பயங்கரம்.. 3 சிறார்கள் கொடூர கொலை? சடலமாக ஏரியில் மிதந்த மாணவர்கள்.!

காதல் தொல்லை

அவ்வப்போது சிறுமியை நேரில் சந்தித்து தன்னை காதலிக்குமாறு விஷ்ணு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த விசயத்திற்கு சிறுமிக்கு விருப்பம் இல்லை. இதனால் மறுப்பு கூறியுள்ளார்.

சிறுமி பலாத்காரம்

இதனிடையே, சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, சிறுமியின் வீட்டிற்கு சென்ற விஷ்ணு தன்னை காதலிக்குமாறு கூறியுள்ளார். அதற்கு சிறுமி மறுத்துள்ளார். 

kanchipuram

இதனால் சிறுமியை கயவன் பாலியல் பலாத்காரம் செய்து, இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் என மிரட்டி வந்துள்ளார். சிறுமி தனக்கு நேர்ந்ததை பெற்றோரிடம் தெரிவிக்காமல் பயத்திலேயே இருந்துள்ளார். 

போக்ஸோவில் குற்றவாளி கைது

இந்த துயரம் நடந்து 80 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், மகளின் செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த பெற்றோர் விசாரித்தபோது உண்மை அம்பலமாகி இருக்கிறது.

இதனையடுத்து, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை செய்து, இளைஞர் விஷ்ணுவை போக்ஸோவில் கைது செய்தனர். மேலும், சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.  
 

இதையும் படிங்க: சேலம்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; தற்காலிக ஆசிரியர் போக்ஸோவில் கைது.!