7 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிய டாலர்; மருத்துவர்களின் செயலால் குடும்பத்தினர் மகிழ்ச்சி.!



in Kanyakumari Baby Throat Chain Stuck 

 

விளையாட்டுத்தனமாக குழந்தை தாயின் கம்மலில் இருந்த டாலரை கவ்வி விழுங்கிய சம்பவம் நடந்துள்ளது.

கம்மலை கவ்வியது

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணலிக்கரை பகுதியில் வசித்து வரும் தொழிலாளிக்கு, திருமணம் முடிந்து மனைவி மற்றும் 7 மாத பெண் கைக்குழந்தை இருக்கிறது. இதனிடையே, நேற்று முன்தினம் இரவு குழந்தை தாயுடன் விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், அவரின் கம்மலில் இருந்த டாலரை கவ்வி விழுங்கி இருக்கிறது. 

இதையும் படிங்க: குமரியே அதிர்ந்தது.. எதிர்தரப்பு வக்கீலுடன் சேர்ந்து வழக்கை இழுத்தடித்தவர் கொடூர கொலை., பெட்ரோல் ஊற்றி எரித்த பயங்கரம்..! 

மருத்துவமனையில் அனுமதி

இதனால் அதிர்ந்துபோன தாய், உடனடியாக மகளை குடும்பத்தினர் உதவியுடன் குமரி மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்துள்ளார். உடனடியாக குழந்தைக்கு எக்ஸ்ரே செய்து பார்த்த மருத்துவர்கள், குழந்தையின் தொண்டை பகுதியில் டாலர் இருப்பதை உறுதி செய்தனர். 

kanyakumariSurgery | File Pic

உயிரைக் காத்த மருத்துவர்கள் 

இதனையடுத்து, நேற்று குழந்தையின் தொண்டை பகுதியில் சிக்கி இருந்த டாலரை எண்டோசக்கொபி சிகிச்சை மூலமாக வெளியே எடுத்தனர். குழந்தைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குழந்தை டாலரை விழுங்கியதும், அலட்சியம் காண்பிக்காமல் பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்ததால் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: "துரோகத்திற்கு தண்டனை மரணம்.." வக்கீல் எரித்து கொலை.!! சரணடைந்த குற்றவாளி.!!