மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குமரியே அதிர்ந்தது.. எதிர்தரப்பு வக்கீலுடன் சேர்ந்து வழக்கை இழுத்தடித்தவர் கொடூர கொலை., பெட்ரோல் ஊற்றி எரித்த பயங்கரம்..!
பணம் வாங்கிக்கொண்டு எதிர்க்கட்சி வழக்கறிஞருடன் சேர்ந்து வழக்கை இழுத்தடித்து, குடும்பத்தை அழிப்பேன் என மிரட்டிய வழக்கறிஞர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் குமரியை நடுநடுங்க வைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் வசித்து வருபவர் இசக்கிமுத்து. இவர் சொத்து தொடர்பாக நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், அவ்வழக்கு உதவிக்காக கிறிஸ்டோபர் சோபி என்பவரை வழக்கறிஞராக நியமனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: "துரோகத்திற்கு தண்டனை மரணம்.." வக்கீல் எரித்து கொலை.!! சரணடைந்த குற்றவாளி.!!
சோபியா வழக்கை தனது தரப்பான இசக்கி முத்துக்கு சாதகமாக செயல்படுவதை விட்டுவிட்டு, எதிர்தரப்பு வழக்கறிஞருடன் சேர்த்து எதிர்த்தரப்பை இணைக்கப்படுத்தி வந்துள்ளார். வழக்கையும் தொய்வடைய விட்டு இருக்கிறார். தொடர்ந்து சொத்துப்பிரச்சனை இவர்களின் இணக்கத்தால் இழுத்தடிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞரின் செயலால் தவிப்பு
இதனை அறிந்து கடுப்பான இசக்கிமுத்து, வழக்கறிஞரிடம் தனது ஆவணங்களை தருமாறு சண்டையிட்டு வந்துள்ளார். ஆனால், வழக்கு ஆவணங்களை கொடுக்க மறுத்த சோபி, இசக்கி முத்துவுக்கு மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இதனால் வழக்கில் அனுகூலமான நிலை ஏற்படாமல் இசக்கி தவித்து வந்துள்ளார்.
இதனிடையே, கடந்த புதன்கிழமை இரவு நேரத்தில் இசக்கி முத்துவுக்கு தொடர்பு கொண்டு வாழைக்கன்று வேண்டும் எனவும், அதற்காக ஏற்பாடுகளை செய்யுமாறும் சோபி கூறியுள்ளார். இந்த நிலையை தனக்கு சாதகமாக்கிய இசக்கி, வழக்கறிஞரை கொலை செய்ய விபரீத எண்ணம் தீட்டி இருக்கிறார்.
போதையில் வார்த்தையால் வறுத்தெடுத்த வழக்கறிஞர் கொலை
வாழைக்கன்று கொடுப்பதாக பீமநகர் பகுதிக்கு வழக்கறிஞரை வரவழைத்தவர், அங்கு குளக்கரை பகுதியில் சோபிக்கு மதுபானம் ஊற்றி கொடுத்துள்ளார். பின் அவரிடம் வழக்கு தொடர்பாக பேசி, ஏன் ஆவணங்களை கொடுக்க மறுக்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதனால் ஆவேசமான சோபி, போதையில் வாயில் வந்த வார்த்தைகளை அள்ளி வீசி இருக்கிறார்.
உன்னை குடும்பத்துடன் கொலை செய்திடுவேன், குடும்பத்தையே வாழ விடமாட்டேன், இந்த வழக்கை வைத்தே உங்களின் குடும்பத்தை அழித்துவிடுவேன் என வார்த்தைகளை வீச, ஏற்கனவே கொலை செய்யும் எண்ணத்துடன் வந்த இசக்கிமுத்து, அரிவாளை எடுத்து வழக்கறிஞரின் கழுத்தை வெட்டிக் கொலை செய்துள்ளார்.
இளைஞர் சரணடைந்தார்
பின் அவரின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, நேரடியாக ஆரல்வாய்மொழி காவல் நிலையம் சென்று தகவலை கூறி சரணடைந்தார். முதலில் அதிகாரிகள் இவரை நம்பாமல், குளக்கரைக்கு வந்து பார்த்தபோது அதிர்ந்துபோயினர். பின் உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் நிலையத்தில் சரணடைந்த இளைஞர் இசக்கிமுத்து, விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் வழக்கறிஞர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: காந்த குரலில் கவர்ச்சி பேச்சு.. சல்லாப எண்ணத்துடன் சென்ற தொழிலதிபரை கற்பழித்து கபளீகரம் செய்த கும்பல்..!