ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
14 வயது சிறுமியை வழக்கறிஞர் வன்கொடுமை செய்த விவகாரம்; மேலும் சிலருக்கு தொடர்பு? தொடரும் விசாரணை.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை பகுதியில் கணவரை பிரிந்து, ரப்பர் தோட்டத்தில் வேலை பார்த்து வரும் பெண்ணுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் இன்ஸ்டா காதலனை நேரில் பார்க்க சம்பவத்தன்று இரவில் வீட்டில் இருந்து வெளியேறினர். அப்போது, சிறுமிகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்ற வழக்கறிஞர் அஜித் குமார், தனது அலுவலகத்தில் வைத்து சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தார்.
வழக்கறிஞருக்கு மாவுக்கட்டு
பின் சிறுமிகளை வெளியூருக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு அவர்கள் மீட்கப்பட்டனர். சிறுமிகள் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் அஜித் குமார் கைது செய்யப்பட்டார். இவர் கைது நடவடிக்கையின்போது தப்பிச் சென்று கை-கால் எலும்புகளை முறித்துக்கொண்டு, தற்போது மாவுக்கட்டு இருக்கிறார்.
விசாரணை வளையத்தில் சிலர்
விசாரணையில், காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் காதலரை தேடி சிறுமிகள் சென்றது தெரியவந்தது. இந்த விசயத்திற்கு நெல்லை, அம்பாசமுத்திரம் இன்ஸ்டா நண்பர் மோகன் (30) உதவுவதாக கூறி, அவர் மனைவிகளை வாடகை வீட்டில் தங்க வைத்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது. இதனால் அவரிடம் விசாரணை நடத்தும் எண்ணத்துடன் அதிகாரிகள் களமிறங்கி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: கன்னியாகுமரி: 14 வயது சிறுமி பலாத்காரம்; அலுவலகத்தில் வழக்கறிஞரின் அதிர்ச்சி செயல்..! போக்ஸோவில் கைது.!
இதையும் படிங்க: சந்துக்குள்ள இவ்வுளவு வேகம் தேவையா அண்ணாத்த? வாகனத்தை கரப்பாண்பூச்சி போல கவிழ்த்த நபர்.!