தேசிய நெடுஞ்சாலையில் அலட்சியமாக ரிவர்ஸ்; அடிச்சி தூக்கிய லாரி.. 10 பேர் படுகாயம்.. பதறவைக்கும் காட்சிகள்.!



in Karnataka Udupi Car Lorry Crash During Reverse 

 

ஓட்டுனரின் அலட்சியத்தால் 10 பேரின் உயிர் ஊசலாடும் சோகம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டம், குண்டபுரா தாலுகா, கும்பாஷி கிராமத்தில் ஸ்ரீ சந்திகா துர்கா பரமேஸ்வரி கோவில் தேசிய நெடுஞ்சாலை எண் 66ல் அமைந்துள்ளது.

இதையும் படிங்க: "ஒரு நொடி பொறுமையா வந்திருக்கலாமே?".. கார் - இருசக்கர வாகனம் மோதி இளைஞர் பலி., முந்திச்சென்று சோகம்.. பதறவைக்கும் காட்சிகள்.! 

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த குழுவினர், தங்களின் இன்னோவா காரில் உடுப்பி நோக்கி பயணம் செய்துகொண்டு இருந்தனர். அப்போது, வழியில் மேற்கூறிய துர்கா கோவிலை பார்த்துள்ளனர்.

லாரி - கார் மோதி பயங்கரம்

இதனால் கோவிலில் சாமி தரிசனம் செய்து செல்லலாம் என நினைத்து, வாகனத்தை பின்னோக்கி இயக்கி இருக்கின்றனர். அச்சமயம், அதே சாலையில் லாரி ஒன்று வந்தது.

இந்த இரண்டு வாகனமும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டது. கார் ஓட்டுநர் சாலையில் இருந்தபடி தொடர்ந்து வாகனத்தை பின்னோக்கி இயக்கியதால் விபத்து நேர்ந்தது.

இவ்விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேர், சாலையில் இருந்தவர்கள் என மொத்தமாக 10 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், இவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.

லாரியின் ஓட்டுனரும் விபத்தில் படுகாயமடைந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: தனியார் பேருந்து - டூவீலர் மோதி பயங்கரம்... நொடியில் பறிபோன கல்லூரி மாணவி உயிர்.! அலறிய பயணிகள்., பதறவைக்கும் காட்சிகள்.!