96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
"ஒரு நொடி பொறுமையா வந்திருக்கலாமே?".. கார் - இருசக்கர வாகனம் மோதி இளைஞர் பலி., முந்திச்சென்று சோகம்.. பதறவைக்கும் காட்சிகள்.!
குறுகிய சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் முந்திச் சென்றதால் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் பலியான சோகம் நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை, மேல்புறம் பகுதியில், சாலையில் லாரிகள் அடுத்தடுத்து பயணம் செய்தது. எதிர்திசையில் இருசக்கர வாகன ஓட்டி வந்துகொண்டு இருந்தார்.
இதையும் படிங்க: "ஆசைக்கு இணங்கு" நிதிநிறுவன மேலாளரின் அதிர்ச்சி செயல்., போலி பிடியாணை பிறப்பித்து பாலியல் தொல்லை.!
பொறுமையாக வந்த லாரி ஒன்றை, மற்றொரு லாரி முந்தி வந்தது. அந்த லாரிக்கு பின்புறம் கார் ஒன்றும் அதிவேகமாக வந்தது.
இதனிடையே, எதிர்திசையில் இருசக்கர வாகனம் வந்த நிலையில், லாரி ஓட்டுநர் சுதாரித்து வாகனத்தை இயக்கி சென்றுவிட்டார். லாரிக்கு பின்னால் முந்தி வந்த கார் இதனை கவனிக்கவில்லை.
இருசக்கர வாகனத்தில் வந்தவர் பலி
இதனால் இருசக்கர வாகனம் நேரடியாக காரின் மீது மோதி விபத்தில் சிக்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இளைஞர் விஜய்குமார் என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இருசக்கர வாகனத்தில் வந்த மற்றொரு நபர், காரில் வந்த ஒருவர் என 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே அலட்சியமாக ஓவர்டேக் செய்த கார், எதிரே வந்த பைக் மீது மோதியதில் அதை ஓட்டி வந்த விஜயகுமார் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு
— Sun News (@sunnewstamil) November 17, 2024
பின்புறம் அமர்ந்திருந்த இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி#SunNews | #Kanyakumari | #RoadAccident pic.twitter.com/nxcNo110Ii
இதையும் படிங்க: மகனின் பிறந்தநாளில் தந்தை கொடூர கொலை; முன்விரோதத்தால் இரும்பு கம்பியால் அடித்து பயங்கரம்.!