11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; அரசுப்பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி செயல்.. ஓசூரில் கொடுமை.!



in-krishnagiri-hosur-3-minor-boy-sexual-harassment

 

படிக்கும் வயதில் கேடான பழக்கத்தை கொண்ட சிறார்கள் 3 பேர், 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியில், 6 ம் வகுப்பு பயின்று வரும் 11 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்புறம் விளையாடிக்கொண்டு இருந்தார். 

இதையும் படிங்க: கிருஷ்ணகிரி: லாரி உட்பட 3 வாகனங்கள் மோதி விபத்து; 3 பேர் பரிதாப பலி.!

அப்போது, தண்ணீர் தாகம் எடுத்ததால் அருகிலிருந்த தனது தோழியின் வீட்டிற்கு சென்று தண்ணீர் குடிக்க முடிவு செய்த நிலையில், செல்லும் வழியில் அதே பகுதியை சேர்ந்த 3 அரசுப்பள்ளி சிறார்கள் அவரை இடைமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். 

Krishnagiri

3 பேர் போக்ஸோவில் கைது

இதனையடுத்து அச்சத்தில் அங்கிருந்து தப்பித்து, வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நேர்ந்ததை கூறி கதறி அழவே பெற்றோர் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தியதில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர்கள் அரசுப்பள்ளியில் 9,10,11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் என தெரியவந்துள்ளது. பின் இவர்கள் மூவரையும் கைது செய்த அதிகாரிகள், சிறுவர்கள் என்பதால் சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

இதையும் படிங்க: துக்க வீட்டிற்கு சென்று வந்தவர்களுக்கு நடந்த சோகம்; 3 பேர் பரிதாப பலி.!