திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
மதுரை: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 6 சிறார்கள் அதிர்ச்சி செயல்.!

மதுரை மாநகர பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமி சம்பவத்தன்று கடைக்கு சென்றுள்ளார். பின் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. நீண்ட நேரம் ஆகியதால், பதற்றமடைந்த பெற்றோர் மகளை தேடினர். சிறுமி எதிர்திசையில் அழுதபடியே வந்துள்ளார்.
காவல் நிலையத்தில் புகார்
சிறுமியை கவனித்த பெற்றோர் நடந்தது என்ன என கேட்க?, சிறுமியோ அப்பகுதியில் இருந்த சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ந்துபோன சிறுமியின் பெற்றோர், மதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: #JustIN: தென்மாவட்டத்தில் ஜாதிய கொலைகள் அதிகரிப்பு - விசிக திருமாவளவன் பேட்டி.!
6 பேர் போக்ஸோவில் கைது
புகாரை ஏற்ற காவல்துறையினர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சிறுமியுடன் படித்து வரும் மாணவர்கள் உட்பட 6 பேரை அடையாளம் கண்டனர். இதனையடுத்து, 3 மாணவர்கள் உட்பட 6 சிறார்களை போக்ஸோ சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: #Breaking: எச்சில் இலையில் அங்கபிரதட்சணம் செய்ய தடை - மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி.!