#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
#JustIN: மதுரையில் காவலர் எரித்துக்கொல்லப்பட்ட விவகாரம்; 4 பேரிடம் விசாரணை.. 21 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம் செய்ய ஏற்பாடு.!

தனிப்படை காவலர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.
மதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை, ஈச்சனேரி பகுதியில், நேற்று பாதி எரிந்த நிலையில் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்தது. நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தனிப்படை காவலர் மலையரசன் (36) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நரிக்குடி, முக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். தற்போது சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் காவல் நிலையத்தில், தனிப்படை காவலராக வேலை பார்த்து வருகிறார்.
இதையும் படிங்க: #BigBreaking: 36 வயது காவலர் எரித்துக்கொலை? பாதி எரிந்த சடலம் மீட்பு.. மதுரையே அதிர்ச்சி..!
காவல்துறை விசாரணை
சம்பவத்தன்று விபத்தில் சிக்கிய மனைவியின் மருத்துவ அறிக்கையை வாங்க வந்தவர், பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்பது உறுதியானது. மலையரசனின் கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 குண்டுகள் முழங்க நல்லடக்கம்
இந்நிலையில், காவலரின் உடல் பிரேத பரிசோதனை நிறைவுபெற்று, அவரின் உடல் காவல்துறையினர் மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்படுகிறது. தத்தனேரி பகுதியில் இறுதி சடங்கு நடக்க ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. அவரின் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தின் பேரில் 4 பேரிடம் அதிகாரிகள் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு, இறுதிச்சடங்குக்கு பின்னர் காவல்துறையினர் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்.
இதையும் படிங்க: #Breaking: நெஞ்சில் முட்டிதூக்கிய காளை; இளைஞர் பரிதாப பலி.. முதல்வர் பிறந்தநாள் ஜல்லிக்கட்டு போட்டியில் சோகம்.!