#BigBreaking: 36 வயது காவலர் எரித்துக்கொலை? பாதி எரிந்த சடலம் மீட்பு.. மதுரையே அதிர்ச்சி..!



in Madurai a Cop Killed  

தனிப்படை காவலர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

மதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை, ஈச்சனேரி பகுதியில், இன்று பாதி எரிந்த நிலையில் சடலம் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்தது. உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

காவலர் சடலமாக மீட்பு

இதனிடையே, சடலமாக மீட்கப்பட்ட நபர், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தனிப்படை காவலர் மலையரசன் என்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இவரின் மனைவி சமீபத்தில் விபத்தில் சிக்கி, கடந்த மார்ச் 1 அன்று சிந்தாமணி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: #Breaking: நெஞ்சில் முட்டிதூக்கிய காளை; இளைஞர் பரிதாப பலி.. முதல்வர் பிறந்தநாள் ஜல்லிக்கட்டு போட்டியில் சோகம்.!

madurai

தனிப்படை காவலர்

36 வயதாகும் காவலர் மலையரசன், விருதுநகர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். தற்போது சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் காவல் நிலையத்தில், தனிப்படை பிரிவில் காவலராக வேலை பார்த்து வருகிறார்.

அவரின் மரணத்தில் மர்மம் தொடருவதால், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். காவலர் எரித்துக்கொலை செய்யப்பட்டாரா? மனைவி இறந்த விரக்தியில் தற்கொலை செய்துகொண்டாரா? அவருக்கு யாருடனும் முன்விரோதம் இருக்கிறதா? என விசாரணை தொடருகிறது.

நேற்று நெல்லையில் முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, இன்று மதுரையில் தனிப்படை காவலரின் மர்ம மரணம் நடந்துள்ளது.

இதையும் படிங்க: மண் திருட்டு புகார்; அரசு ஊழியர் மீது சரமாரி தாக்குதல்.. கொலை முயற்சி.!