கள்ளக்காதலனை கழுத்தறுத்து கொன்று தலைமறைவான கள்ளக்காதலி; ஆசையாக சென்றவருக்கு அதிர்ச்சி சம்பவம்.!



  IN MADURAI Sholavandan MAN kILLED BY WOMAN dUE TO AFFAIR 

தோழியின் வீட்டிற்கு சென்ற நபர், வாக்குவாதத்தில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வசித்து வருபவர் கணேசன் (வயது 40). இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதனிடையே, கடந்த டிச.12 அன்று, வீட்டில் கழுத்தறுக்கப்ட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இந்த விஷயம் தொடர்பாக சோழவந்தான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கணேசனை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என விசாரணை நடந்து வந்தது.

இதையும் படிங்க: மருமகளின் உல்லாச லீலைகள்.. மாமியார் செய்த செயல்.. பின் நடந்தேறிய விபரீதம்.!

கள்ளக்காதல்

 

இந்நிலையில், கணேசனை கொலை செய்த விவகாரத்தில், அதே ஊரில் வசித்து வரும் மாரிமுத்து என்ற நபரின் மனைவி பாண்டியம்மாள் (வயது 45) கைது செய்யப்பட்டார். இவரிடம் நடந்த விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை நடந்தது தெரியவந்தது.

illegal affair

தனிமை உல்லாசம்

அதாவது, கணேசன் - பாண்டியம்மாள் இடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதல் உறவாக மலர்ந்துள்ளது. இதனால் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விஷயம் இருதரப்பு உறவினர்களுக்கு தெரியவந்த நிலையில், அவர்கள் கண்டித்துள்ளனர். 

வாக்குவாதம்

இதனை கண்டுகொள்ளாத கள்ளக்காதல் ஜோடி, தங்களின் உறவை தொடர்ந்து வந்துள்ளது. இதனிடையே, கடந்த டிச.12 அன்று கணேசன் பாண்டியம்மாள் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

கழுத்தறுத்து கொலை

இந்த வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பாண்டியம்மாள், தனது வீட்டில் இருந்த கத்தியைஎடுத்து கணேசனின் கழுத்தறுத்து கொலை செய்து தப்பிச் சென்றார். விசாரணையைத் தொடர்ந்து பாண்டியம்மாள் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: "நம்ம புள்ளய கொன்னவன் கூட கள்ள தொடர்பு கேக்குதோ..." காதலனுக்கு அரிவாள் வெட்டு.!! அண்ணன், கணவன் கைது.!!