" அண்ணனை சைட் அடிப்பியா என கேட்ட தோழிகள்" சூர்யாவின் தங்கை கூறிய உண்மை சம்பவம்.!?
மருமகளின் உல்லாச லீலைகள்.. மாமியார் செய்த செயல்.. பின் நடந்தேறிய விபரீதம்.!
கணவன் இல்லாத நேரத்தில் கள்ள காதல்
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள நெரும்பூர் கிராமத்தில் வசித்து வந்த லட்சுமி (வயது 58) கணவனை இழந்த நிலையில், தனது மகன் ராஜசேகர் (42) மற்றும் மருமகள் அமுல்(38) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். ராஜசேகர் அடிக்கடி ஆந்திராவிற்கு சென்று மாத கணக்கில் தங்கி வேலை பார்ப்பது வழக்கமாக நடக்கும் ஒரு விஷயம்தான். எனவே லட்சுமி தனது மருமகளுடன் வீட்டில் இருப்பார். அமுலுக்கு, கணவன் இல்லாத சமயங்களில் பக்கத்து தெருவை சேர்ந்த சரவணன் எனும் 42 வயது நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கண்டித்த மாமியார் மீது கோபம்
இதை லட்சுமி பலமுறை வன்மையாக கண்டித்துள்ளார். ஆனால், அமுலு அதையெல்லாம் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. கடந்த திங்கள்கிழமை இது பற்றி இருவருக்கும் இடையில் பயங்கர தகராறு ஏற்பட்டுள்ளது. அன்று இரவு இந்த தகராறு குறித்து சரவணனிடம் அமுலு கூறியுள்ளார். தங்கள் உறவுக்கு இடைஞ்சலாக இருக்கும் லட்சுமியை போட்டு தள்ள அமுலு, தனது கள்ளக்காதலன் மற்றும் தோழி பாரதி இருவருடனும் சேர்ந்து திட்டம் தீட்டினார்.
இதையும் படிங்க: "நம்ம புள்ளய கொன்னவன் கூட கள்ள தொடர்பு கேக்குதோ..." காதலனுக்கு அரிவாள் வெட்டு.!! அண்ணன், கணவன் கைது.!!
பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி
நள்ளிரவு அனைவரும் துவங்கிய பின்னர், அவர்களின் திட்டத்தை துவங்கினர். அதன்படி லட்சுமியை அடித்து கழுத்தை நெரித்து கொன்று, அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்ததாக அமுலு ஜோடித்துள்ளார். மறுநாள் அக்கம் பக்கத்தினர் இது பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸ் லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரித்ததில், லட்சுமி உடலில் காயங்கள் இருந்ததும், கைரேகை இருந்ததும் தெரியவந்தது.
தலைமறைவான கும்பல்
இதனைத் தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அமுலுவின் கள்ளக்காதல் கதை வெளிவந்தது. மேலும், இந்த தகவலறிந்த கொலையாளிகள் மூன்று பேரும் தலைமறைவாகினர். இன்று அவர்கள் தானாகவே போலீசில் சரணடைந்து லட்சுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிந்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: "சேர்ந்து வாழ வரமாட்டியா.." கள்ள காதலன் மீது கொலைவெறி தாக்குதல்.!! இளம் பெண் கைது.!!