அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
மதுரை: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 58 வயது எஸ்ஐ சஸ்பெண்ட்!
மதுரை மாவட்டத்தில் உள்ள திடீர் நகர் காவல் நிலையத்தில், குற்றப்பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வருபவர் ஜெயபாண்டி (வயது 58). இவர் கடந்த டிச.13 அன்று, திருக்கார்த்திகை நாளில் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார்.
பாலியல் தொல்லை
அப்போது, சுவாமி தரிசனத்திற்கு வருகை தந்திருந்த 14 வயது சிறுமியிடம் பேச்சு கொடுத்தவர், சிறுமி கழிவறைக்கு சென்றபோது பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார். இதனால் அதிர்ந்துபோன சிறுமி, கண்ணீருடன் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 17 வயது பள்ளி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. அண்ணா பல்கலை.,யை மிஞ்சும் கொடூரம்.. குமரியில் அதிர்ச்சி.!
காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
பெற்றோர் குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் உண்மையை கண்டறிந்தனர். பின் போக்ஸோ உட்பட 4 பிரிவுகளின் கீழ் திருப்பரங்குன்றம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, தற்போது ஜெயபாண்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: #Breaking: கல்லூரி வளாகத்திலேயே மாணவியை நிர்வாணப்படுத்தி பாலியல் சீண்டல்; காதலருடன் தனிமையில் இருந்தபோது பகீர்.!