17 வயது பள்ளி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. அண்ணா பல்கலை.,யை மிஞ்சும் கொடூரம்.. குமரியில் அதிர்ச்சி.!



in-kanyakumari-17-year-old-minor-girl-raped

விளையாட்டு நிகழ்ச்சிக்கு சென்று வந்த சிறுமியை, வீட்டிற்கு அழைத்து செல்வதாக உறுதியளித்த இளைஞர், அவரின் நண்பர், போதை ஆசாமிகள் என பலர் சீரழித்த சம்பவம் குமரியை அதிரவைத்துள்ளது. பெண்ணுறுப்பு சிதைந்துபோகும் வகையில் பலரால் சிறுமி அனுபவித்த துயரத்தில், முக்கிய குற்றவாளியை காவல்துறை வீட்டிற்கு அனுப்பி வைத்ததாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது.

பள்ளி மாணவி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மணலிக்கரை பகுதியில், அரசு உதவிபெறும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 17 வயதுடைய சிறுமி 12 ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சம்பவத்தன்று திருச்சியில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு கன்னியாகுமரி வந்த நிலையில், பள்ளி வாகனத்தில் இருந்து பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விட்டுள்ளார். 

இதையும் படிங்க: 14 வயது சிறுமிக்கு பிரசவம்; லிப்ட் கொடுப்பதாக இளைஞன் அதிர்ச்சி செயல்.!

பெண்ணுறுப்பு சிதையும் வகையில் கொடுமை

அச்சமயம், அங்கு வந்த நபர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் மாணவியை அழைத்துச் சென்று வீட்டில் இறக்கிவிடுவதாக கூறி அழைத்துசென்றுள்ளார். தனது வீட்டிற்கு சிறுமியை அழைத்துச் சென்றவர் பலாத்காரம் செய்து, பின் நண்பரையும் அத்துமீற அனுமதித்து இருக்கிறார். இதுபோதாதென, பலர் அடுத்தடுத்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் சிறுமியின் பெண்ணுறுப்பு சிதைந்துபோனதாகவும் கூறப்படுகிறது.

Rape

முக்கிய குற்றவாளி விடுவிப்பு?

 

சிறுமி அலறியபோது வாயில் துணி வைத்து, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து அத்துமீறல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ரித்தீஷ் குமார், பைசல் கான் ஆகியோர் முக்கிய குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நிலையில், அனைத்து மகளிர் காவல்நிலைய அதிகாரிகள் குமாரை விடுவித்து, பைசலை மட்டும் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது. கடந்த 26ம் தேதி சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கிறார்.

மாதர் சங்கம் கோரிக்கை

இந்த விவகாரத்தில் சங்கிலித்தொடர் போல குற்றவாளிகள் இருக்கும் நிலையில், ரித்தீஷ் குமார் கஞ்சா உட்பட போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் ஈடுபடுபவர் எனவும் கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதர் சங்கத்தின் சார்பில் காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குமரியில் மாணவியை பலரால் சீரழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி அதிர்வலையை உண்டாக்கி இருக்கிறது.

இதையும் படிங்க: பள்ளி பருவ காதலை மீண்டும் கனெக்ட் செய்த பெண் ஐடி ஊழியர்.. கற்பழித்து கைவிட்ட காதலன்.!