ஜாகிர் உசேனின் மகனையும் கொலை செய்ய சதித்திட்டம்? நோட்டமிட்ட நபர்.. மகன் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.!



in Nellai Zakir Hussain Murder Case 


திருநெல்வேலியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன், கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக அதிகாலை நேரத்தில் கொலை செய்யப்பட்டார். இவர் தனது மாவட்டத்தில் நடந்த வக்பு வாரிய சொத்துக்கள் முறைகேடு மற்றும் ஆக்கிரமிப்பை எதிர்த்துள்ளார். மொத்தமாக 30 க்கும் மேற்பட்டோர் திட்டமிட்டு அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. 

ஆனால், காவல்துறை தரப்பு நிலத்தகராறில் 2 பேர் கும்பலால் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாகிர் உசேன் கொலை செய்யப்படும் முன்பு, அவர் பேசிய விடியோவும் வெளியாகியது. இதன்பேரில் நெல்லை காவல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனிடையே, தந்தையின் கொலை சம்பவம் குறித்து மகன் அதிர்ச்சிதரும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 

ஜாகிர் மகன் வீடியோ

அந்த வீடியோவில், "தந்தையின் கொலை வழக்கு விஷயத்தில், அடுத்தது நானாக இருக்கலாம். இன்று ஒருவர் எனது வீட்டு வாசலில் வந்து வீடியோ எடுத்தார். நான் அதனை பார்த்து வெளியே சென்றதும், அவர் இருசக்கர வாகனத்தை எடுத்துசென்றுவிட்டார். அப்பாவின் மரணத்தை பத்தி எங்களுக்கு வருத்தம் இல்லை. ஒருநிமிட வேதனை தான் அது. சாவுக்கு பின் உள்ள பொறுப்பு மிகப்பெரியது. 

இதையும் படிங்க: நெல்லையில் முன்னாள் காவலர் கொல்லப்பட்ட விவகாரம்; காவல் உதவி ஆணையர், இன்ஸ்பெக்டர் பணியிடைநீக்கம்.!

பதவிநீக்கம் செய்யுங்கள்.

எப்.ஐ.ஆர் பதிவு செய்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. முக்கிய குற்றவாளியை கைது செய்ய முடியவில்லை. இன்று நாளை என அலைக்கழிக்கிறார்கள். அரசு அதிகாரிகள் அரசுத்துறை அதிகாரிகளை காப்பாற்ற நினைக்க வேண்டாம். போலியான பிசிஆர் வழக்குகளை அதிகாரி செந்தில் குமார் பதிவு செய்வதில் வல்லவர் போன்று தெரிகிறது. ஏற்கனவே அவர் இவ்வாறான செயலை மேற்கொண்டுள்ளார். இதனால் பணிமாற்றம் மட்டுமே நடந்துள்ளது. 

குற்றவாளிகளைக்காப்பாற்ற முயற்சிக்க வேண்டாம். அடுத்ததாக தேர்தல் வருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அரசுத்துறை அதிகாரிகளை காப்பாற்ற முயற்சிக்காமல், அவர்களை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுங்கள். நான் களமிறங்கவேண்டும் என முடிவெடுத்துவிட்டால் எதையும் யோசிக்க மாட்டேன். நெல்லை மாவட்டத்தில் முஸ்லீம் வாக்குகள் அதிகம் இருக்கின்றன" என பேசினார்.

 

இதையும் படிங்க: #Breaking: ஜாகிர் உசேனின் உடலை பெற உறவினர்கள் ஒப்புதல்; உதவி ஆணையர், ஆய்வாளர் விரைவில் சஸ்பெண்ட்.!