நெல்லையில் முன்னாள் காவலர் கொல்லப்பட்ட விவகாரம்; காவல் உதவி ஆணையர், இன்ஸ்பெக்டர் பணியிடைநீக்கம்.!



in Tirunelveli Murder Case AC and Inspector Suspended 

திருநெல்வேலி மாவட்டத்தில் வசித்து வைத்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன், நிலப்பிரச்சனை தொடர்பான விஷயத்தில் கொலை செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஜாகிர் உசேன் முன்னதாக பேசிய வீடியோ வெளியாகி வைரலாகியது. 

மேலும், தனது புகார்கள் மீது காவல் உதவி ஆணையர் செந்தில்குமார், காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் உசேன் மரணத்துக்கு முன் பேசிய வீடியோவில் கூறி இருந்தார். இதனால் எதிர்தரப்புக்கு ஆதரவாக செயல்பட்ட காவல் அதிகாரிகளின் காரணமாக உசேன் கொல்லப்பட்டதாக குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது.

tirunelveli

பணியிடைநீக்கம்

இந்நிலையில், திருநெல்வேலி நகர முன்னாள் உதவி ஆணையர் செந்தில்குமார், காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்றே காவல் ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இன்று கோவை நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் பொறுப்பில் இருக்கும் செந்தில் குமார், பணியிடைநீக்கம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: #Breaking: ஜாகிர் உசேனின் உடலை பெற உறவினர்கள் ஒப்புதல்; உதவி ஆணையர், ஆய்வாளர் விரைவில் சஸ்பெண்ட்.!

வழக்கில் தொடர்புடைய நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. பணியிடைநீக்கம் செய்யப்பட்ட உதவி ஆணையர், ஆய்வாளர் ஆகியோரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 

இதையும் படிங்க: நெல்லை: சிகிச்சைக்கு வந்த 24 வயது இளம்பெண்ணிடம் ஆபாச பேச்சு; மருத்துவர் கைது.!