மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தடுப்பூசி செலுத்தியதால் சோகம்; சீல் வைத்த பயங்கரம்.. பெரம்பலூரில் அதிர்ச்சி.!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம், ஆடுதுறை, வீரமநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் சங்கர். இவரின் மனைவி நிர்மலா. தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். ஒரு மகன் கல்லூரியில் படித்து வரும் நிலையில், இளையமகன் ஆடுதுறை அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இதனிடையே, கடந்த செப். மாதம் 13 தேதியில் இளையமகன் அர்ஜுனுக்கு, லெப்பை குடிகாடு ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள், சிறுவனுக்கு டிடி எனப்படும் தடுப்பூசியை செலுத்தி இருக்கிறார்கள். மொத்தமாக 77 மாணவர்களுக்கு ஊசி செலுத்தப்பட்ட நிலையில், அர்ஜுனுக்கு மட்டும் கையில் வலி இருந்துள்ளது.
இதையும் படிங்க: கோவையில் பரபரப்பு... பெண்களை வீடியோ எடுத்த போலீஸ்காரர்.!! மடக்கி பிடித்த பொதுமக்கள்.!!
அறுவை சிகிச்சை நிறைவு;
தடுப்பூசி முகாமில் சிறுவனுக்கு ஊசி செலுத்தப்பட்ட நிலையில், அவரின் கைகளில் வலி தொடர்ந்துள்ளது. மறுநாள் மீண்டும் லப்பைக்குடிக்காடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக பெரம்பலூரில் அனுமதி செய்யப்பட்டார்.
அங்கு சோதனை நிறைவுபெற்று, திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் கைகளில் சீல் பிடித்துள்ளதாக தெரிவித்த நிலையில், அவருக்கு கைகளில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது சிறுவன் வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: நெல்லை அருகே பயங்கரம்... இளம் பெண் அடித்து கொலை.!! 3-வது கணவர் கைது.!!