மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோவையில் பரபரப்பு... பெண்களை வீடியோ எடுத்த போலீஸ்காரர்.!! மடக்கி பிடித்த பொதுமக்கள்.!!
கோயமுத்தூர் நகரில் சாய்பாபா காலனி அருகே பெண்களை வீடியோ எடுத்த போலீஸ்காரரை பொதுமக்கள் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பிடிபட்ட நபர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். அவரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்களை வீடியோ எடுத்த நபர்
கோவை நகரின் சாய் பாபா காலனி பேருந்து நிறுத்தத்தில் பஸ் ஏறுவதற்காக பயணிகள் பலரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது மது போதையில் இருந்த நபர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பெண்களை தனது செல்போனில் வீடியோ எடுத்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள் கூச்சலிட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த நபரை மடக்கி பிடித்த பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் வெளியான அதிர்ச்சி உண்மை
இதனைத் தொடர்ந்து அந்த நபரை காவல்துறையினர் விசாரித்ததில் அவரது பெயர் பாலமுருகன் என்றும் காவல்துறையின் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வருவதும் தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையிலடைத்தனர். மேலும் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பு தெரிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: நெல்லை அருகே பயங்கரம்... இளம் பெண் அடித்து கொலை.!! 3-வது கணவர் கைது.!!
கேள்விக்குறியாகும் பெண்களின் பாதுகாப்பு
தற்போது நாட்டில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மேற்குவங்க மாநிலத்தில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து நாடெங்கிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் வெளிவர தொடங்கி இருப்பது மக்களை அச்சமடைய செய்திருக்கிறது.
இதையும் படிங்க: திருமணமான 45 நாளில் நடந்த சோகம்.!! கணவன் கண் முன்னே துடிதுடித்து பலி.!!