இராமநாதபுரம்: கார் - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கரம்.. 3 பேர் பலி..!



in Ramanathapuram Rameswaram Car Accident 3 Died 

 

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் நோக்கி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் காரில் பயணம் செய்தனர். 

இவர்களின் கார் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புத்தேந்தல்விளக்கு பகுதியில் வந்துள்ளது. அப்போது, இராமேஸ்வரத்தில் இருந்து மதுரை, ஆரப்பாளையம் வழியாக தேனி நோக்கி தமிழ்நாடு அரசு ஏசி பேருந்து பயணித்தது.

இதையும் படிங்க: #Breaking: இராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் கைது.. சிங்கள கடற்படை மீண்டும் அட்டகாசம்.!

இரண்டு வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. அதாவது, கார் ஓட்டுநர் உறக்கத்தில் இருந்ததால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. 

ramanathapuram

3 பேர் பலி

காரில் மொத்தமாக 4 பேர் பயணம் செய்த நிலையில், அவர்களில் 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் இராமேஸ்வரம் பகுதியில் நடைபெறும் கூட்டுகுடிநீர் திட்ட பணிக்காக வருகை தந்துள்ளனர்.

அப்போதுதான் விபத்து நடைபெற்று இருக்கிறது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த குத்தலிங்கம், ராஜசிம்மன் என 3 பேர் உயிரிழந்தனர். பெண் ஒருவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த மூன்றாவது நபரின் அடையாளத்தை கிகைகள் சேகரித்து வருகின்றனர். 

பேருந்தில் பயணித்த சில நபர்களுக்கும் காயம் ஏற்பட்டதால், அவர்களும் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: திருமணத்திற்கு முதல் நாள் கம்பி நீட்டிய மணமகன்.. பெண் வீட்டார் குமுறல்.!