ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
#Breaking: சேலத்தில் பயங்கரம்.. குழந்தைகள் இருவர் பலி., குடும்பத்தினர் 3 பேர் படுகாயம்.. சரமாரி தாக்குதல்.!

கெங்கவல்லியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் veliyagiullathu
சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி பகுதியில் வசித்து வருபவர் அசோக் குமார். இவரின் மனைவி தவமணி (வயது 38). தம்பதிகளுக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், வித்யதாரணி (வயது 13), அருள் குமாரி (வயது 10), அருள் பிரகாஷ் (வயது 5) என மூன்று மகன்கள் இருக்கின்றனர்.
இதையும் படிங்க: சிறையில் கஞ்சா, செல்போன் விற்க முயற்சி; காவலர் பணியிடைநீக்கம்.!
இதனிடையே, சில மாதங்களாகவே தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியதாக தெரியவரும் நிலையில், அசோக் குமார் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை தம்பதியின் குடும்பத்தினர் அரிவாள் உட்பட பயங்கர ஆயுதத்தால் வெட்டப்பட்டவாறு அபயக்குரல் இட்டுள்ளனர்.
இருவரின் மரணம் உருகி
சத்தம் கேட்டு வந்த உறவினர்கள், குடும்பத்தினர் அனைவரும் உயிருக்கு போராடுவதை உறுதி செய்தனர். பின் கெங்கவல்லி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, மருத்துவமனையில் அருள் பிரகாஷ், வித்யதாரணி ஆகியோரின் மரணம் உறுதி செய்யப்பட்டது.
தவமணி, அருள் குமாரி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அசோக் குமார் தலையில் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். இவர்களின் மீது முன்விரோதத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதா? வீட்டில் கொள்ளை முயற்சி ஏதேனும் நடைபெற்றதா? கணவன் - மனைவி சண்டையில், கணவர் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தினரா? என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: வேனில் வாக்குவாதம்.. சிறுவனின் ஆத்திரத்தால் உயிரே போச்சு.. சேலத்தில் நடந்த சோகம்.!