பாக்கியாவிற்கு அடுத்தபடியாக வரும் பெரிய ஆபத்து! அதில் பாக்கியா மீண்டு வருவாரா? ப்ரோமோ வீடியோ இதோ....
பள்ளி வாகனம் பள்ளத்தில் கவிழ்த்து விபத்து; 10 மாணவ-மாணவியர்கள் காயம்.!

சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி பகுதியில் கோகுலம் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவ-மாணவிகளின் வசதிக்காக, நிர்வாத்தின் சார்பில் பேருந்து போக்குவரத்து ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல மல்லிகரை, கணக்கம்பட்டி பகுதியில் இருக்கும் மாணவர்களை ஏற்றுக்கொண்ட பேருந்து பள்ளி நோக்கி பயணம் செய்தது.
இதையும் படிங்க: #Breaking: சேலத்தில் பயங்கரம்.. குழந்தைகள் இருவர் பலி., குடும்பத்தினர் 3 பேர் படுகாயம்.. சரமாரி தாக்குதல்.!
பள்ளத்தில் கவிழ்த்து விபத்து
வேன் அங்குள்ள கரளம்பட்டி கிராமம் அருகே சென்றபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்புசுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த 10 மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். பள்ளி வாகனம் விபத்திற்குள்ளான செய்தி அறிந்த பெற்றோர், பதறியபடி மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறையில் கஞ்சா, செல்போன் விற்க முயற்சி; காவலர் பணியிடைநீக்கம்.!