தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
#Breaking: ரூ.250 பந்தயத்திற்கு ஆசைப்பட்டு மாணவர் பரிதாப பலி.. முட்டித்தூக்கிய காளை.. தஞ்சாவூரில் சோகம்.!

சில நாட்களில் அரசு பொதுத்தேர்வை எதிர்கொள்ளவிருந்த மாணவர், பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் பகுதியில் வசித்து வருபவர் விஜயா. இவரின் மகன் பெனடிக் (வயது 15). சிறுவன் அங்குள்ள வல்லம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 10 ம் வகுப்பு பயின்று வருகிறார். இன்னும் சில நாட்களில் பொதுத்தேர்வை எதிர்கொள்ளவிருக்கிறார்.
இதனிடையே, அரசுப்பள்ளிக்கு அருகே பண்ணை ஒன்று இருக்கும் நிலையில், பண்ணை தோட்டத்தின் உரிமையாளர் சுரேஷ் என்பவர், தனது காளையை ஜல்லிக்கட்டு போட்டிக்காக தயார்படுத்தி வந்துள்ளார்.
இதையும் படிங்க: கணவரை இழந்த பெண் குழந்தையுடன் விபரீதம்.. பெண் தற்கொலை, மகன் உயிர் ஊசல்.!
பந்தய ஆசை
நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்த சிறுவன், காளையை பழகுவதை வேடிக்கை பார்த்துள்ளார். அப்போது, சுரேஷ் தனது காளையை தொட்டால் ரூ.250 தருகிறேன் என பந்தயம் காட்டியுள்ளார்.
சிறுவன் மரணம்
இதற்கு ஆசைப்பட்ட சிறுவன் பெனக்டிக், கட்டியிருந்த காளையை தொட முயற்சித்துள்ளார். அப்போது, காலை திமிறி மாணவரை முட்டி தூக்கியது. இதனால் படுகாயமடைந்த சிறுவன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், சிறுவனின் உறவினர்கள் கண்ணீர் துயரத்திற்கு உள்ளாகினர். மேலும், சுரேஷின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவர் அம்மிக்கல் போட்டுக்கொலை; மனைவி சம்பவம்.!