கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவர் அம்மிக்கல் போட்டுக்கொலை; மனைவி சம்பவம்.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம், ராமகிருஷ்ண நகர் பகுதியில் வசித்து வருபவர் அன்பரசன் (வயது 42). இவரின் மனைவி கலைவாணி (வயது 38).
தம்பதிகள் இருவருக்கும் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்து, இருவருக்கும் குழந்தைகள் இருக்கின்றனர்.
கள்ளக்காதல் பழக்கம்
இதனிடையே, அன்பரசனுக்கும் - வேறொரு பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், கள்ளக்காதலாக மாறி இருக்கிறது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: 13 வயது சிறுமிக்கு பள்ளி வளாகத்தில் நேர்ந்த சோகம்; மூக்கில் இரத்தம் வெளியேறி பறிபோன உயிர்.!
இந்த விஷயம் கலைவாணிக்கு தெரியவரவே, அவர் தனது கணவரை கண்டித்து, கள்ளக்காதல் பழக்கத்தை கைவிடுமாறு கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், பலனில்லை.
தலையில் கல்லைப்போட்டு கொலை
இதுதொடர்பாக இன்று எழுந்த வாக்குவாதத்தில், கலைவாணி தனது கணவரின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தார்.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அன்பரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கலைவாணியை கைது செய்தனர்.
இதையும் படிங்க: வயிற்றுவலி, மனஅழுத்ததால் விபரீதம்; 35 வயது பெண் இரயில் முன் பாய்ந்து தற்கொலை.!