மெஷின் பெல்ட்டில் சிக்கி 25 வயது இளைஞர் கோர மரணம்; நொடியில் நடந்த சோகம்..!



in Thirunelveli a Quarry Machine Operator Died

பணியிடத்தில் ஊழியர்கள் கவனமாக இருந்து பணியாற்ற வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் பகுதியில் வசித்து வருபவர் ஜான்சன். இவரின் மகன் சாமுவேல் (வயது 25). திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல்கிணறு, மங்கம்மாள் சாலை பகுதியில் எம்.சாண்ட் குவாரி செயல்பட்டு வருகிறது.

இந்த குவாரியின் உரிமையாளராக அரவிந்தன் என்பவர் செயல்பட்டு வருகிறார். சாமுவேல், குவாரியில் மெஷின் ஆபரேட்டராக வேலை பார்க்கிறார். இதனிடையே, சம்பவத்தன்று சாமுவேல், கல் அரைக்கும் இயந்திரத்தை இயங்கிக்கொண்டு இருந்தார்.

Tirunelveli News Today

அப்போது, எதிர்பாராத விதமாக அவரின் கை பெல்ட்டில் சிக்கியது. மெஷின் ஓடிய வேகத்தில் பெல்ட்டுடன் மெஷினுக்குள் இழுக்கப்பட்டவர், இயந்திரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க: #JustIN: ரௌடி வசூல் ராஜா கொலை வழக்கு; கல்லூரி மாணவர்கள் உட்பட 10 பேர் கைது.. 4 பேருக்கு மாவுக்கட்டு.!

தகவல் அறிந்து வந்த பணகுடி காவல்துறையினர், சாமுவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: தூக்கத்தில் இருந்த இளைஞரை எழுப்பி கொடூரமாக கொலை; சரமாரியாக வெட்டி பயங்கரம்...! மதுரையில் பகீர்.!