மத்திய அமைச்சரை வரவேற்று நடிகரின் போஸ்டர்; காரணம் என்ன? பாஜக தரப்பு விளக்கம்.!



in Thiruvallur Amith Shah Poster 

 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், மத்திய தொழில் பாதுகாப்புப்படை (சிஆர்பிஎப்) வீரர்கள் வருடாந்திர ஆண்டு நிகழ்ச்சியை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்திருந்தார். 

அவரை வரவேற்க பாஜக தொண்டர்களும் ஆயத்தமாகி இருந்தனர். இதனிடையே, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் புகைப்படத்திற்கு பதிலாக, தமிழ் நடிகர் சந்தான பாரதியின் புகைப்படம் ஒட்டப்பட்ட வரவேற்பு போஸ்டர் தொடர்பான காணொளி வெளியாகியது.

இதையும் படிங்க: +2 மாணவி தீக்குளித்து தற்கொலை.. திருவள்ளூரில் சோகம்.!

பாஜக விளக்கம்

இந்த விஷயம் சர்ச்சையை சந்தித்த நிலையில், பாஜக தொண்டர்கள் இவ்வாறான போஸ்டரை ஒட்டவில்லை. திமுகவினர் அரசியல் உள்நோக்கத்துடன் அவமதிப்பை ஏற்படுத்தும் பொருட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என பாஜக சார்பில் குற்றசாட்டு முன்வைக்கப்ட்டுள்ளது.

 

இதையும் படிங்க: வேலை கொடுத்த முதலாளி வீட்டுக்கே துரோகம்; பெண் செய்த பகீர் செயல்.!