வேலை கொடுத்த முதலாளி வீட்டுக்கே துரோகம்; பெண் செய்த பகீர் செயல்.!



in Thiruvallur Woman Arrest theft Case 

 

திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள ஜெயா நகர் பகுதியில் வசித்து வருபவர் மோகன் ராவ் (வயது 34). இவர் வியாபாரியாக வேலை பார்த்து வருகிறார். மோகனின் வீட்டில், அம்சா நகரில் வசித்து வரும் குட்டியம்மாள் (வயது 48) என்ற பெண்மணி, கடந்த 6 ஆண்டுகளாக பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருகிறார். 

குட்டியம்மாள் வேலைக்கு வராத நாட்களில், அவரின் மகள் அனிதாவை வேலைக்கு அனுப்பி வந்துள்ளார். இதனிடையே, இனி வேலைக்கு வரமாட்டேன் என்று கூறி, கடந்த ஜன.08 முதல் குட்டியம்மாள் வேலையை விட்டு நின்றுள்ளார். 

இதையும் படிங்க: மஞ்சள் தாலி ஈரம் காயல.. புதுமாப்பிள்ளை விபத்தில் பலி.. தங்கச்சிக்கு என்ன சொல்லுவேன்? - கண்ணீரில் வெதும்பிய இளைஞர்.!

thiruvallur

நகையை திருடியது அம்பலம்

பின் மோகன்ராவின் மனைவி, கடந்த பிப்.23 அன்று பீரோவில் இருந்த நகையை பார்த்தபோது, 15 சவரன் அளவிலான நகை மற்றும் ரூ.1 இலட்சம் ரொக்கம் மாயமானது தெரியவந்தது. இந்த விஷயம் குறித்து மோகன்ராவ் திருவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

புகாரை ஏற்ற கவல்த்துறையினர் நடத்திய விசாரணையில், குட்டியம்மாள் நகையை திருடி அடகு வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து, 14 சவரன் நகைகள் மீட்கப்பட்டது. உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. குட்டியம்மாள் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த துயரம்.. வீடுபுகுந்து அத்துமீறல்.!