ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
மகள் தற்கொலை செய்த சோகத்தால், தந்தையும் விபரீத முடிவு.. படிக்க சொன்னது குத்தமா?
படிக்க அறிவுறுத்தப்பட்ட மகளே தன்னை புரிந்துகொள்ளாமல் உயிரிவிட்டார், நான் இருந்து என்ன பயன்? என விரக்தியில் இருந்த தந்தையும் விபரீத முடிவை எடுத்ததால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.கே பேட்டை ஊராட்சி ஒன்றியம், வீரானத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன் (வயது 52).
இதையும் படிங்க: மத்திய அமைச்சரை வரவேற்று நடிகரின் போஸ்டர்; காரணம் என்ன? பாஜக தரப்பு விளக்கம்.!
இவர் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில், காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
வெங்கடேசனுக்கு 15 வயதுடைய அர்ச்சனா என்ற மகள் இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்த நிலையில், சரிவர பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
மனமுடைந்து தற்கொலை
இதனால் வெங்கடேசன் தனது மகளை கண்டித்து படிக்க அறிவுறுத்தியுள்ளார். இதனால் வேதனையடைந்த அர்ச்சனா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மகளின் மறைவு வெங்கடேசனை கடுமையான துயரில் ஆழ்த்தி இருக்கிறது. இதனிடையே, வெங்கடேசன் குளக்கரை பகுதிக்கு சென்று, அங்கிருந்த புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த விஷயம் குறித்து ஆர்.கே பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: +2 மாணவி தீக்குளித்து தற்கொலை.. திருவள்ளூரில் சோகம்.!