மீசை முளைக்காத வயதில் பப்பி லவ்.. பேசமறுத்த சிறுமியை மண்ணெணெய் ஊற்றி எரித்த எக்ஸ்.. தூத்துக்குடியில் திடுக் சம்பவம்.!



in Thoothukudi a Minor Girl Murder ATtempt

விபரமறியாத வயதில் சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய இளைஞன், அவர் பேச மறுத்ததும் ஆத்திரத்தில் கொலை செய்ய துணிந்தது எந்த வகை காதலை சேர்ந்தது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அதேநேரத்தில், திரைப்பட காட்சிகளை ஒப்பிட்டு காதல் என்றதும் கண்ணை மூடி நம்பிக்கை கொண்டால், அந்த நம்பிக்கை எந்த மாதிரியான விபரீதத்தை ஏற்படுத்தும் என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவமும் உதாரணமாக அமைந்துவிட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம், கீழநம்பிபுரம் பகுதியில் வசிப்பவர் காளியம்மாள். இவர் கணவரை பிரிந்து 2 பெண் குழந்தையுடன் வாழ்கிறார். காளியம்மாளின் 17 வயது மகள், பரமக்குடியைச் சேர்ந்த சந்தோஷ் என்ற 22 வயது இளைஞரை காதலித்து இருக்கிறார். இந்த விஷயம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததால், அவர் மகளை கண்டித்துள்ளார். இதனால் சிறுமி சந்தோஷுடன் பேசவில்லை. 

சிறுவயது காதல்

சிறுமி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடியில் இருந்தபோது, சிறுவயது முதலாக பழகி வந்த இருவரும், கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து இருக்கின்றனர். அதாவது, அரும்பு மீசை முளைக்காத வயதில் இளைஞன் சிறுமிக்கு காதல் வலை வீசி இருக்கிறார். 14 வயதில் சிறுமியும் காதல் வயப்பட்டுள்ளார். பின் வீட்டில் சிக்கி, காதலனுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். அவரின் பாட்டி வீட்டுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: தூத்துக்குடி: சொத்து தகராறில் பயங்கரம்; முதியவர் அடித்தே கொலை!

 Thoothukudi

இருவர் கைது

அப்போதுதான், தனது நண்பர் முத்தையாவுடன் தூத்துக்குடி புறப்பட காதலன் சந்தோஷ், சிறுமியை தன்னிடம் பேசும்படி வற்புறுத்தி இருக்கிறார். சிறுமி மறுக்கவே, ஆத்திரத்தில் அவரின் உடலில் மண்ணெணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சந்தோஷ், முத்தையா ஆகியோரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: பெட்ரோல் போட்ட அடுத்த நொடியே தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்; தூத்துக்குடியில் ஷாக்..!