ஓரினசேர்க்கையில் 10 வயது சிறுவன் கொடூர கொலை; கோவில்பட்டி துயரத்தில் பரபரப்பு தகவல் அம்பலம்.!



  in Thoothukudi Kovilpatti 10 Year Old Boy Killed Neighbour 

10 வயதுடைய சிறுவன் ஓரினசேர்கைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியில் வசித்து வரும் தம்பதியின் மகன் சமீபத்தில் மாயமானார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அதே பகுதியில் வசித்து வரும் 30 க்கும் மேற்பட்ட நபர்களிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடந்தது.

காவல்துறையினர் தீவிர விசாரணை

மறுநாளில் சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், சிறுவனை கொலை செய்தவர்கள் குறித்து விசாரணை நடந்தது. ஒரு வாரத்திற்கும் மேலாக காவல்துறையினர் குற்றவாளியை கண்டறிய தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி இருந்தனர்.

இதையும் படிங்க: மருமகளின் உல்லாச லீலைகள்.. மாமியார் செய்த செயல்.. பின் நடந்தேறிய விபரீதம்.!

குற்றவாளி கைது

இந்நிலையில், கருப்பசாமி என்ற நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடந்த விசாரணையில், சிறுவன் கொடூர கொலை செய்யப்பட்டதன் மர்மம் விலகியது. அதாவது, சிறுவன் ஓரினசேர்க்கை விவகாரத்தில் சிறுவன் கொலை செய்யப்பட்டது உறுதியானது. 

Murder

ஓரினசேர்க்கை - மூச்சுத்திணறல்

சிறுவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், வாய் மற்றும் ஆசன வாய் பகுதியில் காயம் இருந்ததும், மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதும் உறுதியானது. 

கருப்பசாமி அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது, "சிறுவனை வலுக்கட்டாயப்படுத்தி ஓரினசேர்கைக்கு வற்புறுத்தி கொலை செய்தேன்" என தெரிவித்தார். விசாரணையின்போது, கருப்பசாமி காவல்துறையினர் உடனேயே சந்தேகம் வந்தது போல செயல்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் கோவில்பட்டி பகுதியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தாம்பரம்: "ஹலோ போலிஸ்., என் பொண்டாட்டிய கொன்னுட்டேன்" - மனைவியை கொன்று அதிர்ச்சி தந்த கணவன்..!