திருமணநிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட நடிகை சாய்பல்லவி! வைரலாகும் டான்ஸ் வீடியோ....
தங்கையை காதலித்த இளைஞர் வெட்டிக்கொலை; சமாதானம் பேச அழைத்து கொடூரம்.. இன்ஸ்டா காதல் பயங்கரம்.!

இன்ஸ்டாகிராமில் தொடங்கிய காதல் கொலையில் முடிந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வசித்து வருபவர் விஜய் (வயது 25). இவருக்கும், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை, அண்ணா கீழத்தெருவில் வசித்து வரும் ஜெனிபர் சரோஜா (வயது 23) என்பவருக்கும் இடையே இன்ஸ்டாகிராம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கமானது இருவருக்கும் இடையே காதலாக மலர்ந்து, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர். இதனிடையே, கடந்த 10 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து வெளியேறிய சரோஜா, கள்ளக்குறிச்சியில் உள்ள காதலரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். விஜயின் சகோதரி தனது கணவரை பிரிந்து தற்போது பெற்றோர், தம்பியுடன் வசித்து வருகிறார்.
இதையும் படிங்க: தாயை கொலை செய்து, மகன் தற்கொலை.. மனநலம் பாதிக்கப்பட்டு துள்ளத்துடிக்க சோகம்.!
சம்மதத்திற்காக காத்திருப்பு
இதனால் அவர்களின் குடும்ப பிரச்சனை தெரிந்ததும், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்யலாம் என விஜயின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனை ஏற்று ஜெனிபர் சரோஜா திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சரோஜாவின் காதல் விவகாரத்திற்கு, அவரின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தற்கொலை முயற்சி
காதலனை மறக்க இயலாத ஜெனிபர், கடந்த நவ.28 அன்று எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்ய முயன்றார். இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்ய்யப்ட்டர். இந்த தகவலை விஜய்க்கு தெரியப்படுத்திய ஜெனிபரின் சகோதரர் புஷ்பராஜ் சிம்சன், விஜயை நெல்லைக்கு அழைத்துள்ளார்.
காதலர் வெட்டிக்கொலை
சமாதான பேச்சுவார்த்தை நடத்தலாம் என விஜய் இரயில் மூலமாக நெல்லை வந்த நிலையில், பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியில் உள்ள வீட்டில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் விஜய் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். விஜயன் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விஜயின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணைக்கு பின்னர் புஷ்பராஜ் சிம்சன், அவரின் நண்பர் சிவா ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: நகைக்காக தம்பதிகள் கொல்லப்பட்ட விவகாரம்; 2 ஆண்டுகளுக்கு பின் குற்றவாளிகள் கைது.!