நெல்லை: சிகிச்சைக்கு வந்த 24 வயது இளம்பெண்ணிடம் ஆபாச பேச்சு; மருத்துவர் கைது.!



in Tirunelveli Doctor Arrested Sexual Harassment Case

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி பகுதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணகுடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வசித்து வரும் மக்கள், தினமும் வந்து தங்களின் உடல்நலக்குறைவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மருத்துவராக வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த பாலசந்தர் (48) என்பவர் வேலை பார்த்து வருகிறார். 24 வயதுடைய இளம்பெண், நேரு மதியம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சை பெற வந்தார்.

tirunelveli

பாலியல் தொல்லை

அச்சமயம், பாலசந்தர் பெண்ணிடம் ஆபாசமாக பேசி இருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அவர் நோயாளியிடம் ஆபாசமான முறையில் பேசியது உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிங்க: இன்னும் எத்தனை உயிர்கள்? நெல்லையில் நடந்த கொலை விவகாரம்; கடும் அண்ணாமலை கண்டனம்!

இதனையடுத்து, அவரை பெண்கள் வன்கொடுமை பிரிவில் கைது செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க: நெல்லை: சுவரை நனைக்கும்போது இபி பாக்ஸை மறந்ததால் சோகம்; மின்சாரம் பாய்ந்து இருவர் பலி.!