ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
1095 பேர் சாதிய வன்கொடுமையால் பாதிப்பு.. ரூ.11 கோடி நிவாரணம்.. - இது நெல்லை ரிப்போர்ட்.!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை, குலவணிகர்புரத்தில் வசித்து வருபவர் இசக்கி பாண்டியன். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத்துறைக்கு மனு அனுப்பி வைத்திருந்தார். இந்த மனுவுக்கு நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத்துறை பொதுத்தகவல் அலுவலர் அமுதா பதில் அளித்து இருக்கிறார்.
அந்த பதிலில் அதிர்ச்சியரும் தகவல் வெளியாகி இருக்கின்றன. அதாவது, திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2021 ம் ஆண்டு முதல் 2025 ம் ஆண்டு வரை, மாவட்டத்தில் 1095 பேர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மெஷின் பெல்ட்டில் சிக்கி 25 வயது இளைஞர் கோர மரணம்; நொடியில் நடந்த சோகம்..!
அதேநேரத்தில் அதிகபட்ஷமாக 2021 - 2022 இடைப்பட்ட ஆண்டுகளில் 302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக ரூ.11.30 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 2023 - 2024 ம் ஆண்டில் மட்டும் ரூ.4.69 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு சராசரியாக 250 வழக்குகள் சமூக ரீதியிலான வன்கொடுமை வழக்கில் பெறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பேனர் வைக்கும் பணியில் சோகம்; மின்சாரம் தாக்கி இளைஞர் பலி.!